சொற்பொருள் தேடி

சொற்பொருள் தேடி

சேந்தன் திவாகரம், என்ற
திவாகரர் என்பவராலும்,
பிங்கலம், பிங்கலராலும்
சூடாமணி, மண்டல புருடர்

போன்ற ஆளுமை கொண்ட தமிழி பதிவு  ஆகும்.

மொழி இனமாக வாழ்ந்து வந்த மக்களின் தொகுப்பு கொண்டது ஆகும்.

இவற்றையே மேற்கண்ட திவாகரர் என்பவர் நூற்களஞ்சியமாக சொற்பொருளினை ஒன்பதாம் நூற்றாண்டில் தொகுத்து வழங்கினார்.

சேந்தன் என்ற வள்ளல் திவாகரரை ஆதரித்து பேசியதால் சேந்தன் திவாகரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

திவாகரர் என்பதற்கு சூரியன் எனக் குறித்து உள்ளனர்.

கரந்துறை:

கரந்துறை, சித்திரக் கவியில் ஒன்றென திவாகரம் ஒன்றாகும்.

12. பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி

‘சேந்தன் திவாகரம்’ என்ற நிகண்டானது, சென்னைக் கல்விச் சங்கத்துத் தாண்டவராயரால் பதிப்பிக்கப்பட்ட பத்துத் தொகுதிகளின் மூலத்தையும், சென்னைக் கல்விச் சங்கத்து வித்துவான்களால் பதிப்பிக்கப்பட்டதாகும்.

பிங்கல, சூடாமணி என்ற நூலின் மூலத்தையும் இணைத்து, 1923-ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த நூலைத் தழுவி கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு வரை நூல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆய்வாளர் பலரால் இந்த நூல் பத்தாம் நூற்றாண்டிற்கு “சேந்தன்  திவாகரம் “
என்ற நூலும்,
பின் , பிங்கலம் சூடாமணி என முறைப்படி கருதப்படுகிறது.
சொற்களுக்கு பொருள் தரும் முதல் நிகண்டு ஆகும்.

தமிழில், தமிழி எனும் பதிவில்

கரந்துறை பா:

காலை மாலை ஓலைப்பதிவு கொண்ட தமிழி பதிவு:

“காலை” ‘கா’த்திருந்தே கடலலை’ கண்டோம்
     “மாலை” ‘மா’றுமொளியில் அ’லை’யினைக் கண்டோம்
“ஓலை” சுவடிகளில் ‘ஓ’ராயிமாயிரப் பதிவ’லை’
     “தலை” ‘தலை’மை தாங்கும் ஆளுமை.

ஆளும் ஆளுமைத் தொகுப்பே பதிவு
      நாளும் பொழுதும் நம்பிய செயல்
யாளும் புவியடி ஐந்தடுக்கு சறுக்கு
     தாளும் படிப் படியான படிமலர்ச்சி

படித்த கல்வி தரும் நிலை
      தேடித் தொடர்ந்தே நூலெனத் திகழும்
நாடிச் சென்று சொற்பொருள் களஞ்சியம்
      ஓடி மின்னும் மின்னல் பேரலை.

பேரலை காற்று நீர் தீ
    ஆர வடிவ எழுத்துரு சொற்கள்
கரம் கொண்டு உட்பொருள் கை
     தரம் உயர்த்த நிலைப் பணி.


———————–

ஆளுமை கொண்ட தமிழி பதிவு :
சேந்தன் திவாகரம்
பிங்கல சூடாமணி

12. பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி

பக்கம் 110 தலைப்பு

சித்திர கவி வகை இலக்கம் 52:

21 பெயர்கள் கொண்ட ஓசைப் பா

மாலை மாற்றே:

மாலை மாற்றே, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழு கூற்றறிக்கை,
காதை கரப்பே, கரந்துறைப் பாட்டே,
பாத மயக்கே, பாவின் புணர்ப்பே,
கூடசதுக்கம், கோ மூத்திரியே,
ஓர் இனத்து எழுத்தால் உயர்ந்த பாட்டே,
ஒற்றுப் பெயர்த்தல், ஒரு பொருட் பாட்டே,
விகற்ப நடையே வினா வுத்தரமே,
சருப்பதோபத்திரம், சார்ந்த எழுத்தே,
வருக்கமும் மற்றும் வடநூற் கடலுள்
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து மறைத்து மிறைக் கவிப் பாட்டுத் தெரித்துப் பாடுவது சித்திரக் கவியே.

மாலைமாற்று என்பது
ஒரு செய்யுளை ஒவ்வோர் எழுத்தாகத் தொடக்கம் முதல்
இறுதி வரை படித்தாலும், இறுதியிலிருந்து ஒவ்வோர் எழுத்தாகத் தொடக்கம் வரை படித்தாலும் மாறாமல் அமைவது மாலைமாற்று
என்னும் சித்திரகவியாகும்.

எ.கா: விகடகவி

எழுத்து வருத்தனம்

எழுத்து வருத்தனமாவது, யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு மொழியை எடுத்துக்கொண்டு அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள்படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பதாகும்.

“‘ந’ம் மொழி ‘ம’துர உ’ரை’ ஆற்றுபவர் ” என்ற சொல்லில்
நமது மொழிதனில் மதுரமான உரையாற்றும் என்று சொல்லும் சொல்லில் ” மதுரை ” எனக் கொள்ளலாம்.

எமது பதிவு :

கரந்துறை பாவினம் சித்திரக் கவிதை
     ஆரம் வட்டம் சதுரத் தமிழி சொற்கள்
தரமிகு விந்தை எழுத்துரு ஒலியன்
      கரம் பிடித்து படித்து எழுவகை.

எழும் கேள்விகளில் பதில் வாசிப்பில்
     வாழும் நாள் உயிர்த் துடிப்பு
முழு வரிகளில் சொல் முறைமை
     தழுவித் தரணியில் காக்கும் பொறுப்பு.

பொறுப்பு கொள்ளும் இணைப்பு வரிசை
      நறுமணம் வீசும் காற்றின் மொழி
வேறுபாடு உண்டு ஒன்றினால் ஒற்றுமை
    கூறுகள் ஒற்று மிகும் திறன்.

திறன் ஒத்திசைவு பாவின் புணர்ப்பு
     கறந்து கலந்து உறையில் திணிப்பு
திறவுகோல் வாயசைப் பாக்களில் தொடரலை
    உறவு கொள்ளும் சக்கர உருவெழுத்து. 

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA