மனித குல வரலாறு நூல் விமர்சனம் – தமிழில்

சேப்பியன்ஸ் – மனித குல வரலாறு நூல் விமர்சனம் -1
நூலாசிரியர் : யுவால் நோவா ஹராரே 
தமிழாக்கம் : நாகலட்சுமி சண்முகம்

 ****************************
வரலாறை படிக்கிறோம், வரலாற்றை நாம் நம்புவதில்லை. 
இது ஒரு ஒரே பத(பிரபஞ்ச) வரலாறு விளக்க நூல்.  
பருப்பொருள், ஆற்றலில் தான் இயற்பியல் தோன்றியது
 என்று கூறுகிறது, வேதியியல் உருவாகிறது என்றும்
இயற்கையில் நடப்பதே நிதர்சனமான உண்மை என்றும்
இந்நூல் வலியுறுத்துகிறது. 
‘ பூமி 450 கோடி முன்பு தான் உருவாகி இருக்கிறது ‘ .
என்றும், 380 ஆண்டுகளுக்கு முன்புதான் உயிரினம், 
உயிர் இயல்பாக தோன்றி இருக்கிறது. 
அதன் அடிப்படையிலேயே, இன்று மருத்துவம் வரை பரவி
இருக்கிறது. 
நமது உருவ அமைப்பிலே, கடவுளை உருவாக்கி
இருக்கிறோம்.
உயிர் செல் தோன்றுவது, செயல்படுவது, அழிவது என்று 
உயிரியல் நாம் படிக்கிறோம். படிப்பு, பள்ளியின் தேர்வுடன் 
மறந்து விடுகிறோம். நல்கருத்துக்களை விளக்கும்
இலக்குகளை நிர்ணயிக்கும் இலக்கிய செய்யுள்களை,
உரைநடைகளை படிக்கிறோம். 
ஆம், நம் வீட்டில், சமுதாயத்தில் நாம் எந்தெந்த சமயம் 
காலந்தோறும் பின்பற்றப்படுகிறோமோ, அம்முறைகளை 
அப்படியே பின்பற்றுகிறோம். 
நல் கருத்துக்கள், எல்லா சமயங்களிலும்  மொழியிலும்
ஒன்றே. 
மனித குலத்தின் அடிப்படை தேவையும் உணவு, உடை
இருப்பிடமும் எல்லோருக்கும் ஒன்றே.  
அடிப்படை தேவைகளை பூர்த்தி அடைவதில் தான்
மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிலைப்பெறுகின்றன. 
இவ்வாறாக, மற்ற உயிரின உறுப்புகளோடு  தோன்றிய 
மனித குலம், 70000 ஆண்டுகளுக்கு முன்புதான் அறிவு
பெறும் கலாச்சார அடிப்படைகளில் மனித இனமாக
உருவெடுத்து இருக்கிறது என்று இந்நூல் விவரிக்கிறது.
அனைவருக்கும் சம நிலையில் இருப்பதற்காக உதவும்
சமயக்கருத்துக்களை பரப்ப சமய நல்ல உறவாளர்கள் 
தோன்றினார்கள். 
மனித சம நிலை அடையவேண்டும்  என்ற கருத்துக்களை
தொடராமல், அவரவர்கள் பின்பற்றும் சமய
கருத்துரையாளர்களை விடாமல் பிடித்துக்கொண்டு
 இருக்கிறார்கள். 
இந்நூலில், நவின மனிதர்களைப் போன்ற விலங்குகள்  25 
லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றின என்றும்,
விலங்குகளோடு தான் ஒன்றோடு ஓன்றாக வாழ்ந்ததாக 
குறிப்பிடுகிறார்.
மனித குல வரலாற்றை, இந்நூலில் 4 பகுதிகளாக பிரித்து 
உள்ளார். அந்த நான்கில் முதலில் அறிவு புரட்சி,
இரண்டாவதாக, வேளாண் புரட்சி, பின்பு நாடு, தேச என்ற
ஒருங்கிணைப்பு புரட்சி மூன்றாவதாகவும், நான்காவது 
பிரிவில் அறிவியல் புரட்சி என விவரிக்கிறார். 
கிட்டத்தட்ட 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான், 
நெருப்பை பயன்படுத்தி இருக்கலாம் எனப் பதிகிறார். 
 ‘ நம் நினைவகத்திற்கான விலையை, நாம் செய்யும் 
காரியங்களுக்கே நிர்ணயித்து பரிமாற்றம் செய்து, 
மனித குல நிலைப்பை பெருக்கிக் கொள்கிறோம். ‘ 
மனித குல அறிவுப் புரட்சிக்கான வித்து என நாம் கருதலாம்.
என்கிறார். 
நாம் நிர்ணயம் செய்யும் காலம், நேரம், பொருட்கள்
அனைத்தும் நம் அறிவின் சிறப்பு என நம் 
பல்லாயிரக் கணக்கான நரம்பின் மூளையில் உள்ள
அளவையும், சிறப்பையும் விவிரிக்கிறார். 
நமது பரிணாம வளர்ச்சியானது கால்பந்து விளையாடும்
திறனை வழங்கவில்லை. அதற்கு மாறாக கால்
விளையாட்டு பந்தில் கால்களை பயன்படுத்தாமல்
வேண்டுமென்றே தவறு செய்வதற்கு முழங்கைகளையும், 
எதிர் அணியினரை பற்றி அவதூறு பேசுவதற்கு
வாய்களையும் பரிணாம வளர்ச்சி உருவாக்கியது என்பது 
தான் உண்மை என்கிறார். 
மற்ற விலங்குகள் முரட்டுத்தனமாக விளையாடினாலும்
அவை தன் உள்ளுணர்வின்படியே மற்ற விலங்குகளுடன் 
நடந்து கொள்ளுகின்றன.
 நாய்க்குட்டிகள் முரட்டுத்தனமாக விளையாடினாலும்,
அவற்றின் விதிமுறைகள் அவற்றின் மரபணுக்களில்
ஊறிப்போயுள்ளன. 
அரசாட்சிமுறை, சமயக்கோட்பாடுகள், வர்த்தகத்
தொடர்புகள் போன்ற விஷயங்களுக்கும் முரட்டுத்தனமும்,
மற்றவர்களை வெல்லும் தன்மையான அணுகுமுறையும்  
மனித குலத்திடையே நிலைக்கிறது என்கிறார். 
‘ கற்பனையான ஒழுங்குமுறையும், நம்முடைய
ஆழ்விருப்பங்களேச் செதுக்குகிறது ‘. 
இன்றைய ஆழமான விருப்பஙகள் அனைத்தும் புனைவியம்,
தேசியவாதம், முதலாளித்துவம் மற்றும் தனிமனிதவாதம் 
தொடர்பான கட்டுரைகளால் வடிவமைக்கப்படுகின்றன.
‘ கற்பனையான ஒழுங்குமுறை வேண்டும் என்றால், கோடிக்கணக்கான மக்களின் விழிப்புணர்வை நாம் மாற்றியாக வேண்டும் என்ற நம்பிக்கை கொள்ள 

வேண்டும் ‘ என்கிறார். 
‘ கற்பனையான ஒழுங்குமுறையிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. நாம் சிறைச்சாலைச் சுவர்களை உடைத்தெறிந்துவிட்டு  சுதந்திரத்தை நோக்கி ஓடும்போது, 

அதைவிடப் பெரிய சிறைச்சாலை ஒன்றின் உடற்பயிற்சி மைதானத்திற்குள்தான் நாம் தஞ்சம் புகுகிறோம். ‘ 

தொடரும் . , . ,

%d bloggers like this: