About

செயல் மன்றம், மனித செயலாக்கத்தை உணர்த்தி மேம்படுத்தும் இணையம்.

எண்ணங்களில் கோடி எண்ணிக்கைத் தோன்றலாம்.

எழுத்துக்களில் லட்சக் கணக்கில் பதியலாம்.

சொற்களில் ஆயிரமாயிரம் சொல்லலாம்

கொள்கைகளில் நூற்றுக் கணக்கில் விவரிக்கலாம்

திட்டங்களை பத்தி பத்தியாக பத்துப் பக்கம் கூடத் திட்டமிடலாம்

செயல்களில் ஒன்றாக வடிவம் பெறுவதே என்றும் சிறக்கும் .

செயல்களே மனித நிலைப்புத்தன்மை .

கரந்துறை
மீண்டும் பயன்படுத்த ஓர் அறிமுகம்

————

தமிழில் கவிதைக்கு

முக்கியத்துவம் உண்டு .

கவிதையை , கரந்துறையில்

பதிய வேண்டுமெனில் ,

கவிதை –

க ற்பனையில்
வி தையை
தை ( உண்டாக்கு ) .

எழுத்து , கற்பனையில் தோன்றும்

அற்புத வடிவமைப்பு .

கவிதையில் , மரபு வழித்தடம்

புதிய வழித்தடம் எனப்பிரிக்கலாம்.

*மரபு * என்ற சொல்லை

கரந்துறையில் பகிர வேண்டுமெனில்

*ம க்கள்
ர சனையின்
பு துவடிவம் *

ஆம் , மக்கள் ரசனை ஒவ்வொரு காலத்திலும்

புது வடிவம் பெறும் .

புதியன தோன்றுதல் வழி வழி வந்த மரபு .

புது கவிதை = பு திய
து ணையுடன்

க ற்பனை
வி னையில் ( செயல் வடிவத்தில்)
தை த்தல் .

நற்றிணை- 398ல்

* உருகெழு தெய்வம்

கரந்துறை இன்றே * என்ற வரியில்

மறைந்து , ஒரு இடத்தில் இல்லாமல் இருப்பவர்

என வலியுறுத்துகிறார் .

கரந்து என்ற சொல் ,

பால் கரப்பதற்கும் , உறை என்ற கூற்று

உறைவிடம் எனக்கூறலாம் .

பசு மாட்டில் , கரப்பது போல

ஒவ்வொரு கரந்துறை சொல் உருவாக்கத்திலும்

எழுத்துக்களை கரந்து பின்னர் அச்சொல்லின்

கரந்துறை சொல் உருவாகிறது .

கரந்துறை கோள் என வானில் தெரிந்தும் ,

தெரியாமலும் இருக்கும் என்பர் .

செயல் மன்றம் பதிவர் : –> சி தங்கவேலு –> நிலை குறிப்பு :

தங்கவேலு சின்னசாமி என்ற இந்த பதிவர்

அப்பா : சின்னசாமி, அம்மா : பூரணம்
மூத்த மகன், தங்கை விஜயலட்சுமி, தம்பிகள் பொன்மலைமேகம் எனும் முகநூலில் பதியும்
K.C. நீலமேகம், பெரிய சாமி எனும் சேகர்,
பிரிட்டனில் பணிபுரியும் துரை சங்கர்.
மனைவி கௌரி, இரு மகன்கள், ஒரு மகள்.

தந்தை ஓய்வு பெறும் பொழுது, SRMU, சென்னை, மத்திய சங்கத்தலைவராக இருந்தவர், சமூக,சுமூக, சமுதாய தொழிற்சங்க வாதி.

எமது கல்லூரி நாளில் இருந்தே தொடர்ந்து பின்பற்றுகின்ற தரமிகு சிந்தனை எழுத்தாளர்களில் ஒருவர், உதயமூர்த்தி.
ரயில்வேயில் அலுவலக எழுத்தராக கனவு,
பிரிவு அதிகாரி எனும் நிலை அடைந்து ஓய்வு பெற்றேன்.

ரயிலுக்கு இரு தடங்கள் போல,
ரயில் சேவை ஒரு தடம்.
கற்றலும், கற்பித்தலும் மறு தடம்.
எமது தொடர் செயல் இந்த இரு தடங்களில் பதிந்து உள்ளது என மகிழ்கிறேன்.

ரயிலின் தடம், அனாமத்து கணக்கில், கணினியில் அனாமத்து கணக்கு சமன் நிலையை அன்றே,
அதன் சரியான எண்களின் நிலை அறிந்து,
ஆண்டு கணக்கு முடியும் நாள் அன்றே முடித்து காட்டிய நிலைக்கு, எமது குழுவினரின் செயலோடு, தாளிலும், கணினியின் முறையிலும் கொண்டு வந்தது, எம் பணியில் அன்று, சிறப்பானது என கருதுகிறேன்.

இன்றும் அனாமத்து கணக்கு எண்ணின் நிலை அறிந்தால், கணினியில் சரியாகும் என்பது எம் நிலை,
என்று சரிசெய்யும் நிலையோ!

கற்றல்:
நூல்கள், மாவட்ட, பல்கலைகழக நூலகம் தொடர் வாசிப்பு.
கற்பித்தல்: சேவையாக,
இளம் சிறார் பள்ளி, மாணாக்கர்களுக்கு வணிக கணக்கு பயிற்சி, ஆங்கில மொழி பேச்சு பயிற்சி, நூல்களின் விமர்சனம், மக்கள் சக்தி இயக்க மூலம் நேர்மறை பதிவு.

நூல் ஆசிரியர்:
முதல் நூல்:
முகநூலில் 2015 முதல் தினமும் தொடரும் செயல் மன்றப் பதிவு, “வாழ்வோம், சொற்களிலும், ” எனும் எமது முதல் நூல் அப்துல் கலாம் கரந்துறை, Acrostic சொற்களின் தொடர்ச்சியில் வெளி வந்த நூல்.

எமது இரண்டாவது, மூன்றாவது நூல்:
” செயல் மன்றம், ” மூன்றாவது நூல் ” வீடும் நாடும் ”

எனும் தலைப்பில் உரத்த சிந்தனை வாசக குழமத்தில் வெளியிட்ட நூல்கள், இன்று மாநில, மாவட்ட, சிங்கப்பூர் பொது நூலகங்களில் இருப்பதோடு, ஆய்வு கட்டுரை, தேசிய, பன்னாட்டு கருத்தரங்களில் தொடர்ந்து பதிவதும் முகநூலில் ”
” செயல் மன்றம் ” எனும் நமது குழுவில் பதிவது இன்றைய எமது நிலை.

தொடர் பதிவு நிலைத் தொகுப்பு கீழ்க்கண்ட
இணையத்தளத்தில்

www.seyalmantram.in

என்றும் காணொளி பார்க்கலாம், காதொலியிலும் கேட்கலாம்.

தங்கவேலு சின்னசாமி,
முதுகலை வணிக இயல்,
முதுகலை மெய் இயல் பதிவர்(கல்வி இயல்)

பதிவர்,
செயல் மன்றம்.
seyalmantram@gmail.com
httpc://www.seyalmantram.in

Thangavelu Chinnasamy
https://orcid.org/0000-0003-0888-5440
Websites & Social Links
செயல் மன்றம்/Seyalmantram
Country
India
Keywords
Acrostic Words / Pattern கரந்துறை
Biography
Words Formation in Tamil and English Languages.
Work in http://www.facebook.com/seyalmantram
http://www.twitter.com/@ctv1957

https://podcasts.google.com/Seyalmantram/Thangavelu-Chinnasamy
http://YouTube.com/Thangavelu-Chinnasamy
Employment (1)
Retired Southern Railway In Indian Railway: TRICHY, Tamil Nadu, IN2015-05-01 to present | பதிவர் / Blogger (Seyalmantram செயல் மன்றம்)Employment
Source:
Thangavelu Chinnasamy
Education and qualifications (1)
Madurai Kamaraj University: Madurai, Tamil Nadu, IN| Master of Commerce (M.Com)Education
Source:
Thangavelu Chinnasamy
Works (8 of 8)
கம்பனின் புதிய பரிமாணங்கள்
Kapilan Pathippagam
2021-03-27 | edited-book
Source:
Thangavelu Chinnasamy
வாழும் வள்ளுவம்
உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு 2021
2021-02-28 | conference-paper
Source:
Thangavelu Chinnasamy
நாட்டுப்புற வாழ்வியலும் பண்பாடும்
பன்னாட்டு நாட்டுப்புறவியல் மாநாடு 2021
2021-02-12 | conference-paper
Source:
Thangavelu Chinnasamy
தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள்
Cultural Elements in Tamil Literature
2021-01-04 | conference-paper
Source:
Thangavelu Chinnasamy
தமிழ் இலக்கியங்களில் சமூகம்
தமிழ் இலக்கியங்களில் சமூகம்
2020-11-24 | conference-paper
Source:
Thangavelu Chinnasamy
கணம் இனி -கணினி; எண்ணில் எணினி – உலகமயச் சுழலில் கற்றல் கற்பித்தலும் கணினியில் எணினியில் உருவாகும் கலைச்சொல்லாக்க சவால்கள்
உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கம்.
2020-01-10 | conference-paper
Source:
Thangavelu Chinnasamy
சங்க இலக்கியங்களில் தொழில் நுட்பக் கூறுகள்
சங்க இலக்கியங்களில் தொழில் நுட்பக் கூறுகள்
2019-02-15 | conference-paper
Source:
Thangavelu Chinnasamy
‘தமிழ் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு’ போக்கை மலரச்செய்யுமா?
தமிழ் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு’
2019-01-07 | conference-paper
Source:
Thangavelu Chinnasamy