உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம் நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.

நடுநிலைமை கொள்

உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம்
      நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.

வீடு உறவு உடைமை யாவும்
      நாடு இனம் மொழித் தொடர்
தேடும் துருவம் துருவி முயலும்
    ஓடும் விலகி படும் பாடு.

பாடுபடும் பாடலுடன் கூறும் அவை
    ஏடுடன் புழங்கும் சொல் கேளீர்
எடுபடும் மேற்பார்வை செயலைத் தூண்டும்
    ஆடும் ஆட்டம் உடுக்கும் உடுப்பு.

உடுப்பில் தோன்றும் தோற்றத்தின் மதிப்பு
     வடு தழும்பு மறையும் மேலும்
ஈடுபடும் தொழில் நுட்ப அறிவு
    மடுவு மலை நீர்நிலத்தில் ஈடுபடும்.

ஈடுபட்டு முயன்றவை தொடர் வாழ்வு
       கடும் உழைப்பில் பெறும் தொகுப்பு
உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம்
      நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA