நன்செய் புன்செய்
நிலமே உயிரிணைப்பு:
நாளும் அறிந்திடத்தான்
நாள் கணக்கு
ஆளும் பெயரோடு
பெரிசாக இருக்குமங்கே
வளரும் தன்மையங்கே
வாழும் உயிருமங்கே
இளம் வயசிலேத்தான்
இளமைத் துடிப்புமங்கே!
மனசு மட்டுந்தான்
மதிலா தெரியமெங்கும்
உனது உயிர்த் துடிப்பே
சீராகுமெங்கும்
தனது இருப்பு
போக்கு தரமாகுமெங்கும்
எனது உனதெல்லாம்
செல்லானதாலே எங்கும்.
அலைபேசி அங்கங்கே
வலுவான தொடர்பெங்கும்
தொலைதூர கல்வி
முறைமை கற்றலாகெங்கும்
வலைப்பதிவு காப்பகம்
தான் பாதுகாப்பெங்கும்
நிலைப்பதிவு நிலமெல்லாம்
நடமாடா சேவையெங்கும்.
நன்மை தரும்
இயற்கைத் தோட்டம்
பன்மை பலமாக
பெருகிடும் நீர்நிலைகள்
உன்னை என்னை
உளமாற அளித்திடும்
நன்செய் புன்செய்
நிலமே உயிரிணைப்பு.
பாரதிதாசன் – வள்ளுவர் வழங்கிய முத்துக்கள் – 1 பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்.
பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்
ஆற்றும் ஆற்றலே ஆளுமை பண்பு.

பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்
ஆற்றும் ஆற்றலே ஆளுமை பண்பு.
ஒற்றை செல்லில் ஓங்கும் உயிர்க்கரு
நற்றிணை தோற்ற பொலிவில் தொடரும்
பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்
ஆற்றும் ஆற்றலே ஆளுமை பண்பு.
தந்துகிகள் தரத்தை உயர்த்தும் தடம்
உந்தி பெறும் வகை உண்டு
வந்து வந்து சேரும் பருவம்
அந்த அளவுத் தொடரே வளரும்.
மூலக்கூறுகள் முற்றாக முடிவெடுக்கும் திறன்
பலம் கொண்டு பற்றிடும் உணவு
நலம் கொள்ளும் தளமாக்கத் தசை
வலம் இடம் யாவும் ஒருங்கிணைவே.
அன்பே மொழியாம் அஃதே வழியாக
நன்மை தீமை நல்கும் நற்சிந்தை
பன்மை விகுதியில் தகுதி பெற்று
அன்மைத் தொடர்பினில் பண்பு பழக்கமாகும்.
