ACROSTIC WORDS’ BOOK AUTHOR SPEECH – PUBLISHED FROM NOTION PRESS – TAMIL SPEECH
1. https://youtu.be/Q2LlHEL64vM
2. கரந்துறை பேச்சு
ACROSTIC WORDS’ BOOK AUTHOR SPEECH – PUBLISHED FROM NOTION PRESS – TAMIL SPEECH
1. https://youtu.be/Q2LlHEL64vM
2. கரந்துறை பேச்சு
ஒரு-நொடி-பா-தந்த-புவிவீடு
75,000 ஆண்டுகளுக்கு முன்பு – தொடக்க கால நகை வணிக நடைமுறை
75, 000 ஆண்டுகளுக்கு முன்பு
தொடக்க கால நகை வணிக நடைமுறை
முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகளின் வகை மாற்றங்கள் (ப்ளோம்போஸ் குகை, தென்னாப்பிரிக்கா)
பழமையான நகைகள்:
இதுவரை கண்டறியப்பட்ட பழமையான நகைகளில் சில, 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய கடற் நத்தை ஓடுகளால் செய்யப்பட்ட மணிகள் ஆகும்.
இவையே மனித வரலாற்றில் அடையாளத்திற்கான தொடக்க கால சான்றுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ப்ளோம்போஸ் குகை:
தென்னாப்பிரிக்காவின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ப்ளோம்போஸ் குகையில், சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த, மெருகூட்டப்பட்ட மற்றும் துளையிடப்பட்ட கடல் நத்தை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொருட்களின் பயன்பாடு:
அக்காலத்து நகைகள் எலும்பு, கல் மற்றும் பற்கள் போன்ற கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.
ப்ளோம்போஸ் குகை மற்றும் முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகள்
கலை மற்றும் அடையாளங்கள்:
ப்ளோம்போஸ் குகையில் காணப்பட்ட கிளிஞ்சல் மணிகள் வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல. அவை அடையாளப்படுத்துதல், சமூகத்தின் அங்கமாக இருத்தல், மற்றும் தொடர்பு கொள்ளுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இந்த மணிகள் அணிபவர்களின் குழு அடையாளத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.
சிவப்பு காவிப் பூச்சு:
ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட, ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.
உருவாக்கும் நுட்பம்:
மணிகளை உருவாக்குவதற்காக, நத்தை ஓடுகள் கவனமாகத் துளையிடப்பட்டு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு நெக்லஸ் அல்லது வளையலாக மாற்றப்பட்டன.
இந்த நுட்பமான பணி, அக்கால மனிதர்களின் சிக்கலான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் திறனைக் காட்டுகிறது.
கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம்: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த கலைப்பொருட்கள், மனிதர்களின் படைப்பாற்றல் மற்றும் சமூக நடத்தை குறித்த முந்தைய கருத்துக்களை மாற்றியமைக்க உதவியுள்ளன.
இந்த கண்டுபிடிப்புகள், தற்கால மனிதனின் அறிவாற்றல் படிமலர்ச்சி நிலைபற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளன.
ஒரு நொடி பா தொடரியல் :
தகைசால் முறை வாழ்வுத் தொடக்கம்
வகைச் சார்பில் அடங்கும்.
தகைமை நேர்மை அறம் சார்ந்தவை
வகை பாடும் பாடலின் மூலம்
குகை வாழ்வின் தொடங்கிய பின்
முகைத் (அரும்பு) திணை சமூகத் துறை.
துறை யாவும் இலக்கினை நோக்கும்
பறை சாற்றி வழிபடும் முறை
மறைபொருள் உருவாகி சேவை சேர்க்கை
உறைவிடம் ஆடை ஆபரணம் தொழில்நுட்பமே.
தொழில் நுட்ப கலவை இலக்கில்
வழி வழியாய் மலரும் மரபினம்
வழிகாட்டியத் தொடர்பு வடிவ வேலைவாய்ப்பு
ஊழியருடன் உள்ளவை கருத்துக் கோவை.
கோவை’ ‘கோ’ர்த்த ‘வை’யகத் தொடரியல்
அவையே முறையான வாழ்வும் வாக்கும்
இவையே உலகின் நிலைத் தொடர்
எவையென குறியிடும் மொழிப் பாங்கு.
77,000 ஆண்டுகளுக்கு முன்பு
முட்டைப் புழுக்களை கொல்லும் பூச்சிக்கொல்லி வேதியியல் கொண்ட
நறுமண இலைகளால் மேலே கோரைப் புல்களிலிருந்து படுக்கையை உருவாக்குதல்.
77,000 ஆண்டுகளுக்கு முன்பு – 2
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தொடக்க கால அறிவுசார் மனித இனம் (ஹோமோ சேபியன்கள்)
(டாம் பா லிங் குகை, லாவோஸ்),
86,000 ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெயரத் தொடங்கி, பின் 68,000 ஆண்டுகளுக்குள் குடியேறியிருக்கலாம் என்கின்றனர்.
லாவோஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள அன்னமைட் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு குகைதான் டாம் பா லிங் குகை (குரங்குகளின் குகை).
இது, தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தற்கால மனிதர்களின் தொடக்க கால இருப்பைப் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைத்த இடமாக அறியப்படுகிறது.
டாம் பா லிங், பா ஹாங் மலையின் உச்சியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இது, சுண்ணாம்புக் கற்களால் உருவான ஒரு சாய்வான குகை ஆகும்.
பூச்சிகளின் லார்வா நிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் கோரைப் புல்லில் ஏற்படும் வேற்றுமை திறன் கொண்ட இயல்பான வேதியியல்புகளாகும்.
அவற்றின் மிகவும் பொதுவான பயன்பாடு தேங்கி நிற்கும் நீரில் கொசு முட்டைப் புழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.
தேங்கி நிற்கும் நீரில் முட்டை புழுக்களை, மற்றும் கூட்டுப்புழுவை விஷமாக்குவதன் மூலம் முட்டை புழு வினை கொல்ல செயல்படுகின்றன.
இதனால் அவை கடிக்கும் நிலைக்கு வளரும் கொசுக்களாக தடுக்கப்படுன்றன.
தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடாலில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் தளம் சிபுடு பாறை தங்குமிடம் ஆகும்.
இது தொடக்க தற்கால மனித நடத்தை மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றுகளைக் குறிக்கிறது.
முட்டைப் புழு பூச்சி அதன் புழுக்கள், குறிப்பாக கொசுக்களைக் கொல்லும் ஒரு பொருளின் திறனைக் குறிக்கிறது.
மேலும் இது கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளின் முக்கிய அங்கமாகும்.
டர்பனுக்கு அருகில் அமைந்துள்ள இந்த தங்குமிடம், ஆழமான வரிசைகள் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட கரிமப் பொருட்களைக் கொண்ட ஒரு மத்திய கற்கால தளமாகும்.
இந்த கற்பாறையின் தங்குமிடம் டர்பனுக்கு வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள தோங்கதி (டோங்கதி) நதியைக் கண்டும் காணாத ஒரு செங்குத்தான மணற்கல் பாறையின் மீது அமைந்துள்ளது.
ஒரு நொடி பா : காற்றளவு
காக்கும் காற்றளவு கிடைப்பதும் கீழடியும்
மக்களை நோக்கிச் செல்லட்டும்.
ஓரெழுத்து ஒரு மொழி நோக்கு
யாரெல்லாம் நோக்கிடினும் உள்ள போக்கும்
பாரெல்லாம் நிகழ்ந்திடுமே நின் கவிபாடும்
ஓரெழுத்தில் காட்டும் உன் கனிவும்
கனிவின் உணர்வும் உள்ளமும் புதியது
நனி மிகும் பொருள் யாவும்
நுனி அளவும் நுண்ணறிவு செல்லும்
கனி வகை சேர்க்கும் இனிமை
இனிய சூழல் நட்பு வட்டம்
பனித் துகள்கள் நிலப்பரப்பில் உறையும்
பனிவீடு அரைக் கோள வடிவம்
இனியவை கூடி குடிலென காக்கும்.
காக்கும் நீரில் கலந்த துகள்களும்
ஆக்கம் தரும் தொடர்பு வட்டம்
பக்கத்து பக்கம் சேரும் பனித்துளியும்
ஊக்கம் உடைமையில் காற்றளவும் சேர்க்கட்டும்.
78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.
78000 ஆண்டுகளுக்கு முன்பு கென்யாவில் மூன்று வயது கொண்ட அறிவு சார்
குழந்தை அடக்கம் செய்யப்பட்டதை பதிந்து உள்ளனர்.
இது கென்யாவில் ஒரு பங்காயா சைடி குகையின் தொடக்க கால அடையாளம் ஆகும்.
இந்த மனித சார் நிலை குழந்தையின் எச்சங்கள், Mtoto என்ற புனைப்பெயர் கொண்டவை.
அந்த குழந்தை ஒரு ஆழமற்ற தலையணை போன்ற மேட்டின் மீது தலை வைத்து புதைக்கப்பட்டு உள்ளனர்.
இது ஒரு குழந்தை புதைக்கப்பட்டதான ஒரு குறியீடாகும்.
புலனாய்வாளர்கள் முழு குழியையும் 2017 இல் தோண்டி, நைரோபியில் உள்ள கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்வதற்காக பிளாஸ்டரில் மூடினர்.
கென்யாவில் உள்ள நைரோபியில் தேசிய அருங்காட்சியகத்தில்
குழியில் கண்டுபிடித்த மனிதனுடைய இரண்டு பற்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வைத்து உள்ளனர்
பல மத்திய கற்கால ஆப்பிரிக்கர்கள் எல்லா வயதினரையும் இறந்தவர்களை வாழும் பகுதிகளிலிருந்து புதைத்திருக்கலாம் எனவும் , மக்கள் தொடர்ந்து குகைகளில் வாழ்ந்த அடையாளம் காணப்படுகிறது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லின் வாட்லி கூறுகிறார்.
Mtoto என்ற இப்பகுதி அந்த காலத்திலிருந்தே அதிகமான ஆப்பிரிக்க புதைகுழிகளைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கிறது.
தன்னுணர்வு
தன்னக உணர்வு எந்நிலையிலும் காப்போம்
நின்னகத்தே நிறைவு பெறட்டும்.
இக்கட்டு என்பது தன்னக உணர்வு
எக்கட்டும் அக்கறையுடன் கையும் உதவும்
தக்க வைத்து இணைக்க முடியும்
பக்க நிலையும் முழுமை பெறும்.
பெறும் வரை உள்ள செல்லும்
ஆறுதல் கூறி ஆறனை நுண்அணைவு
மறுபடியும் உருவாக்க முடியும் எனும்
தறுவாயில் உள்ள பொருளில் நாடும்.
நாடுதல் நகரும் துளியில் உறுதி
இடுகையின் உற்றக்கால் தொடங்கும் குறியீடு
நாடும் பொருட்கள் மொத்த உற்பத்திமுறை
தேடுதல் மனித இனத் தொடர்பு.
தொடர் இணைவு பெறும் வாய்ப்பு
கடந்து வந்த பாதை ஆகும்
படம் கதை தாண்டி தெரியும்
உடன்பிறப்புகள் நண்பர்கள் உயிர்நிலைக்கும் வாழ்வு.
Acrostic Words Book – Speech at BIC


http://Banagalore International Centre.org/events_other/acrostic-words https://bangaloreinternationalcentre.org/events_other/acrostic-words/
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.