செயல் மன்றம் – பல மன்றங்களுடன் ஓர் ஒப்பீடு .
பல செயல்கள் ஒருங்கிணைந்து மனித இன செயலால் உருவானவைகள்
தான் நாம் உபயோகப்படுத்துகின்ற அனைத்துப்பொருட்களும் .
நமக்கு தேவைப்படும் பொருட்களை மேலும் தேடிக்கண்டுபிடித்து
உற்பத்தி செய்கிறோம் .
தேவைப்படாதவைகளை விட்டு விடுகின்றோம் .
இவ்வாறாக சேர்க்கப்படும் பொருட்களும், அமைப்புகளுமே பல
மன்றங்களாக நம் உலக நடவடிக்கைகளில் பவனி வருகின்றன .
எனவே , மனித வாழ்விற்கு செயல் தான் முக்கியம் .
இவ்வாறான செயல்களுக்கான மன்றமே செயல்மன்றம் .
செயல் மன்றம் , சட்டமன்றமாக, பாராளுமன்றமாக, நீதி மன்றம் என பல
நடவடிக்கைகள், மனிதர்களை ஒழுங்கான செயல்களுக்காக
உருவாக்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன .
செயல் , மனிதர்களின் ஒழுங்கு .
பல்வேறு செயல்கள் மனிதர்களை ஒருங்கிணைக்கும் .
செயல்கள், தவறுகளை ஒழுங்குபடுத்தும் .
பொருட்கள் நிலைத்து நிற்பதற்கே பல செயல்களை ஒருங்கிணைப்பதில்
தான் நிலைத்து நிற்கும் .
மனிதர்கள் உருவாக்குகின்ற கண்டத்திற்கான , நாட்டிற்கான
மாநிலத்திற்கான, மாவட்டத்திற்கான என பலப்பிரிவுகளின்
எல்லைக்கோடுகளை , இப்பூமி அறிவதில்லை .
நாமே ஏற்படுத்திக்கொள்கின்ற ஒழுங்கு நடவடிக்கைகளே இந்த
அமைப்புக்களாகும் .
ஒழுங்கு நடவடிக்கைகளில் , இலக்கியமும் பங்கு
பெறும் ஓர் கலையாகும் .
இலக்குகள் இயல்பாக நடைபெறுவதை இலக்கியம் .
இலக்குகளை இயல்பாக விவரித்து கூறும் மனித பண்புகளில் கதை ,
கவிதை முக்கியத்துவம் பெறுகிறது .
கதை , கற்பனையை சிந்தையில் நூற்கும், தையல்முறையே
கதையாகும் .
கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையில் உருவகம் பெற்றாலும்
உண்மை வடிவமாக காவியக்கதைகள், நில அமைப்புகளில்
சித்தரிக்கப்படுகின்றன .
கவிதை , உருப்பெறுவதும் கற்பனையை உலாவ விடுவதேயாகும் .
இவை நம் உணர்வுகளை நிம்மதிப்படுத்துகின்றன .
உண்மையும், இதில் பெரும்பாலும் வெளியிடுகின்றோம் .
நம் தேவையான பொருட்கள் நிலைப்பெறுவது
நம்முடைய தொடர்செயல்களே .
நம் தேவைகள் ஆயிரம் . நம் ஆற்றல்கள் நிலைப்பெற தொடர் எரிபொருள்
சூரிய ஒளி ஆற்றலே.
நம் கண்டுப்பிடிப்பும் , சூரிய ஒளி ஆற்றல் நிலைப்பெறுதல் நம்
தற்பொழுதான முக்கியசெயல்களில் ஒன்று .
தகவல்களே, மனித சமுதாயத்தை மேம்படுத்துகின்றன.