T-erms
H-aving
E-volutionary
O-rbit
R-egulates
Y-ear-long
மேகக்கரு மழை
மேகநீர்த்துளி ஒன்றிய புவியின் ஒன்றிணைவு
முகப் பொலிவு கருமேகம் பரவிய ஆவி
காகம் சுற்றும் நீரக வீதி
தாகம் தீர்க்க தண்ணீர் கேட்கும்.
கேட்கும் திறனாளி புவிசார் மண்டலம்
எட்டிப் பார்த்து எகிறி குதிக்கும்
தட்ப வெட்ப நிலைத் தோற்றம்
நட்பு பற்றும் அடர்த்தியில் விழும்.
விழும் நீர்த்துளி இடமே விண்ணுறவு
கழுவும் நீரில் பூக்கள் விரியும்
பழுது நீக்கும் பாசநேசத் தொடர்பு
இழுக்கும் புவியீர்ப்பு விசைத் திறன்.
திறனறிவு இணைப்பு ஓர் தகவல் முறை
ஆற அமர யோசித்து பார்
ஏற இறங்கும் மெய் உணர்வு
பிறப்புமுதல் இறப்புவரை உயிர்க்கருவினத் துளி.