14. 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிகளைத் தின்ற காலம்

14,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

உயிரிகளை தின்ற காலம் எனப்பதிந்து உள்ளனர்.

உயிரக காடி தாயனை(DNA) இணைவு

ஆயிரமாயிரம் ஆறனை(RNA) தொடர்பு.

வான் சிறப்பில் பெறும் துடிப்பு

தான் என்றொரு தருணத்தில் கரு

இன்சொல் பேசி நன்னெறி சேர்க்கும்

பன்முக ஆற்றல் இயற்கை முறை.

தலை முதல் கால் வரை

இலை மறை காய் தொடர்பு

மலை முகடு பள்ளத்தாக்கு பகுதி

அலை அலையான தொடரில் கண்டனர்.

கண் காது மூக்கு வாய் மெய்

அண்மை அருமை செல்லும் செல்

உண்மையில் உயிர் தாங்கும் வாய்ப்பு

ஆண்மை பெண்மை கலந்த உயிரணு.

உயிரணு உருவாகி அருகருகே தொடராக்கம்

பெயரளவில் அறிந்து முறைமை கொள்வோம்

ஓயாத வழி யாவும் பகிர்வு

உயிரின அணுக்கருவினில் தாயனை ஆறனை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA