தேடலே அறம் பொருள் இன்பநாதம்.

தேடலே அறம் பொருள் இன்பநாதம்.

துல்லியக் கணக்கு அறிக்கை தாக்கல்
      அல்லல் படும்  குடிகளுக்கு உதவுமா?
செல்லும் வழி நாணயச் சுழல்
     பல்லுயிர்குடி வளம்பெருக வணிகவேலை வாய்ப்பாகுமா?

வாய்ப்பு கிட்டும் தளம் தேவை
      தாய் தந்தை செல் லிணக்கம்
வாய்ச்சொல்லும் குணம் குலமோ?
உய்ய உயர உயிரியல் சேர்க்கை.

சேர்க்கை கால வரையறை அறிமுகம்
     பார்க்கும் முறை குறியீட்டுப் பங்கு
ஓர் முறையீட்டு நீதி மன்றம்
     சார்பு நிலை உள்ளத் தேடல்.

தேடல் வினவல் உள்ளம் பேசும்
    உடல் கேட்கும் ஆளுமை திறன்
ஆடலிலும் மெய்யுளத் தேர்ச்சி பெறும்
    தேடலே அறம் பொருள் இன்பநாதம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA