அந்தாதி எதுகை பாவினத் தொடர் இலக்கிய இலக்கண அறிவு

இலக்கியத்தின் இயல்பும் கணநேர புரிதலும்

இலக்கிய இலக்கண எழுத்தறிவு.


நீள் வட்டப்பாதையில் கதிரவனின் ஒளிநாடா
        கோள் வட்டப்பாதையில் வடிவுண்ட புவி
வாள் ஒன்றில் பிரிந்து சேரும்
      நாள் ஒன்றென அறிவியல் நம்சுற்று.

நம் சுற்றுலா மனித கூட்டரசு
   ஆம் என்று அறிந்தோர்க்கு வானமே எல்லை
எம் மொழியறிவு  செம்மொழி தொடர்
      உம் எனும் ஊரே உதாரணம்.

உதாரணம் எடுத்துக் காட்டும் நரம்பொலி
       மாதர் மண்ணின் வளம் ஆகும்
பிதா பின்புலத்தில் என்றும் எல்லை
     ஊதா செம்மை கலந்த நீலநிறம்.

நீலநிறக் கருவழி கோள வடிவம்
     இல இல்லாத லட்சியக் கோடுகள்
சில பொருந்திய நீள்வடிவ காப்பு
      பலரும் படித்து அறியவே பல்கலைக்கழகம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA