44,000 ஆண்டுகளுக்கு முன்பு – ஓவியத்தில் கரிமப் பொருட்கள்
#லியாங் புலு’ சிபோங் 4 என்பது
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில்
உள்ள மரோஸ்-பாங்கேப் கார்ஸ்ட் பகுதியில்
அமைந்துள்ள ஒரு சுண்ணாம்புக்
குகையாகும்.
இது பள்ளத்தாக்குத் தளத்தில் உள்ள நுழைவு குகை
மற்றும் தங்குமிட அமைப்பிற்கு மேலே, ஒரு மேல்
மட்டப் பகுதியாக அல்லது ‘இணைப் பகுதியாக’
(annex) காணப்படுகிறது.
‘லியாங் புலு சிபோங் 4’ (Leang Bulu’ Sipong 4) குகையின்
நுழைவாயில், கீழ் மட்ட குகையின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 7.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய திறப்பாகும்.
இந்த குகையின் உட்பகுதி, வடகிழக்குச் சரிவில் உள்ள
ஒரு இயற்கையான திறப்பின் வழியாக வரும் ஒளியால்
வெளிச்சம் பெறுகிறது.
இந்த குகை, வளைந்து செல்லும் ஒரு நிலத்தடி நீர்
வழிப்பாதையில் (phreatic passage) உருவானது.
இதன் அதிகபட்ச அகலம் 4 மீட்டராகவும், நுழைவாயிலில்
5.9 மீட்டர் உயரமாகவும், குகையின் உட்புறத்தில் மிக
ஆழமான பகுதியில் 5.6 மீட்டர் உயரமாகவும் உள்ளது.
இந்த முறையின் அடிப்படை தத்துவம்
(The Core Principle)
குகை ஓவியங்களின் வயதைக் கணக்கிட பொதுவாகப் பயன்படுத்தப்படும் ‘கரிம நாளீட்டு ‘ (Radiocarbon dating) முறைக்கு ஓவியத்தில் கரிமப் பொருட்கள் (Organic materials) இருக்க வேண்டும்.
ஆனால், பல குகை ஓவியங்கள் வெறும் தாது நிறமிகளை (Mineral pigments) மட்டும் கொண்டு வரையப்பட்டவை.
இதனால், அறிவியலாளர்கள் ஓவியத்தின் காலத்தினை நேரடியாக கணக்கிடாமல், ஓவியத்தின் மேல் படிந்துள்ள சுண்ணாம்புப் பாறை படிவத்தின் (Calcite or Calcium Carbonate crust) நிலைப்பினைக் கணக்கிடுகிறார்கள்.
இந்த லேசர்-அப்லேஷன் யுரேனியம்-தொடர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லியாங்
கரம்புவாங் (Leang Karampuang) குகை ஓவியத்தை ஆய்வின் போது, அதன் மேல் இருந்த
சுண்ணாம்பு படிவம் 51,200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இருக்கும் என்கின்றனர்.
இதன் மூலம், மனித வரலாற்றின் மிகப் பழமையான கதை சொல்லும் ஓவியம் இதுவே என்று உலகிற்கு அறிவியல்
நிலையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.
நடைமுறை இயற்பியல்
பாதை காட்டும் பார்வை நுண்கலைகள்
அதை எப்படி ஏற்பதே கேள்வி?
கதை சொல்லி புரிய வைப்போம்
இதை முதலில் ஏற்கும் நடைமுறை.
நடை பாதை காட்டும் அறிவியல்
உடை மேலும் காக்கும் பழக்கம்
படை மூலம் தரும் ஆட்சி
கடைசி நிலை புவி இயற்பியல்.
இயற்பியல் சூழல் மண்டல பருவம்
இயற்கை வளம் இறைமை வழக்கம்
வயல்வெளி தரும் பயிற்சி பயிர்கள்
அயலக ஆய்வக ஏடும் படிப்பு.
படிப்பு கூடும் குறையும் மாற்றம்
நடிப்பு நாடகம் முத்தமிழில் ஒன்றும்
தடிப்புத் தசை தரமாக்கும் சதை
வடிவில் உருவாகும் முகமும் மாறும்.
