பாலக வீதி 24
#காவிரி
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி .,
—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங்கண்ணனார்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. –
காவிரி நதிநீர் இணைப்புச் சோலை
தாவித் தாண்டி நீராகட்டும்.
காலம் கடந்து செல்லும் உள்ளம்
ஞாலம் விரிந்து காக்கும் நிலை
நலமிகு பகுதி நீர் வளம்
வலமிடம் விரியும் குருதி ஓட்டம்.
ஓட்டம் சீராய் ஊறும் அறிவு
நாட்டம் மிகுந்து மகிழ்ச்சியில் ஏற்கும்
வட்டமிட்டு நாளும் தாகம் தீர்க்க
ஊட்டம் பெற்ற சுனை நீர்வழி.
நீர்வழி பள்ளம் நோக்கி நிரவும்
நீர் வாழ் உயிரினச் சேர்க்கை
ஓர் ஊற்றுநீராய் மெல்லப் பெருகும்
ஆர்வம் காட்டிய வயல்வெளி வாய்க்கால்.
வாய்க்கால் வரப்பு பரவிய நிலம்
வாய்ப்பில் உள்ளூர் கண்ட காட்சி
உய்ய உயர உயிர் வாழ்வினம்
பாய்ந்து ஓடும் கால்வாயில் விரிந்திடும்.
விரியும் குருதி ஓட்டம் உடல்
விரிந்த அளவில் தாயனை ஆறனை
ஏரி குளம் நன்னீர் இணைப்பு
வாரி வழங்குபவை காவிரி நதிநீர்.
காவிரி என்ற சொல் முதலில் வந்தது எப்போது?
‘காவிரி’ என்ற சொல் ‘கா’ல்வாய் ‘வி’ரிந்தது’ எனும் கரந்துறை சொல்லாகும்.
‘க’ என்ற சொல் நிறை கொண்ட நீண்ட நீர் வேறுபாட்டு நிலை, அடுக்கு நிலையாக குடகு மலையில் ஆண்டாண்டு காலம் விரிந்து சென்றதை பார்த்து அறிந்து கொண்டனர்.
உடலுக்கு தலை முதல் கால் வரை விரிந்து வளர்ந்து இருப்பது மெய்யியல் விரிவாக்கம் ஆகும்.
குடல் இயக்க குருதி போல், குடகு மலை நீர் அகண்ட நிலையை ஆண்டுதோறும் அறிந்தவற்றை கால்வாய் வழியாக விரிந்து செல்வதை ‘காவிரி’ எனும் கரந்துறை சொல் ஆகும்.
எனவே, #கால்வாய்_விரிந்து_சென்றதை_காவிரி_என_அழைக்கப்படுகிறது.
