நாளது சூழல்:

காலச் சூழலில் நிலை சுற்றும்
வலது இடது நோக்கும் பகுதி
மேலது கீழது பார்வை முடிவுறாத
ஞாலம் புகழும் போற்றும் வகை.

தங்குமிடத்தை ஓரறிவு நிலைப் படுத்தும்
பங்கு நிலையில் தாவர விலங்கு
அங்கம் கணிக்கும் மனித திறன்
நங்கூரம் கொண்டே சூழலும் புவி.

படம் பிடித்த நல்நினைவு நற்செயலாம்
வடமிடம் பார்த்து நடந்து செல்
இடமறிந்து எழும்வாய் சொல்லும் பெயர்
தடம் பதித்து செயலும் செயல்படும்.

காடும் மலையும் கண்டத்தின் துண்டு
ஆடும் அசையும் உயிரினத் தொடரே.
ஓடும் வழி உணர்ந்த உள்ளம்
வீடும் நிலமும் நீரும் சேரும்
நாடும் நகரமும் சுழலும் பாதை
தேடும் சேவை சேர்த்து வைக்கும்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/1–2-e1t9jtq

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: