சுழளாதாரம் – படரும் வாழ்வு

சுழளாதாரம் – படரும் கொடி

ஒன்றிய பனிப் பொழிவு உருகி ய
       தன்மை முன்னிலை படர்க்கையில் படரும்
இன்மையிலா இலக்கின ஆற்றல் சுழலும்
      பன்மை தொகுப்பு பிரிவினை க் கண்டம்.

கண்டம் முற்றும் சுற்றும் பார்
      ஆண்டு கணக்கில் சுழலும் புவி
துண்டு துண்டாகும் உள் நிகழ்வே
     மண் மரம் செடி நிலை.

நிலைமுறை யாவும் நிலைக் கருவிலி
     அலை அலையாய் பனிகப் படிமம்
மலைகள் மேல் உருகும் பனி
      இலைத் தளை தழைக்க நீர்த்துளி.

நீர்பனித் துளிகள் பெரும் கடல்
     ஊர் கூடும் நிலத்தளமே நாடும்
ஓர் பிடி மண்பயிர் வளர்ச்சி
    பார் வையகம்  ஒன்றிய உயிரியம்.

உயிரக காப்பு வளியது சூழல்
      மயிரிழை இழைந்திடும் உயிரினச் சேர்க்கை
பயிரின வேர் விதையும் தரணி
      உயிரினம் காக்கும் வழிவகை படிமலர்ச்சி.

படிப் படியாக உருப் பெறுமதி
      ஆடி அசைந்து செல்லும் உயிரினம்
நாடித் தேடி உண்ட உயிர்
      ஓடியாடி வேலை செய்யும் வாய்ப்பு.

வாய்ப்பு வாசல் வழிகாட்டிய மரபு
     தாய் தந்தை உயிரிய பயணம்
நோய் நொடி அறிந்த மனிதம்
     வாய்வழி உணவு உண்ணும் மகிழ்வு.

மகிழ்ந்த சிந்தனை வளரும் தருணம்
      ஊகித்து உதித்த மரணம் நொடியும்
பகிர்ந்து உண்ட பல்லுயிர் பெருக்கம்
      சகிப்புத் தன்மை முன்னிலை படரும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: