காண்க பொங்கும் அசைவு அரியதொரு வாய்ப்பு வாழும் மனிதர்காள் உரியதொரு இணைப்பு நிலம் நீர்ச்சுற்று கரியதொரு மிதப்பு கசக்கி வெளியேறும் சரியாகும் வரை சதிராடும் சதுப்புநிலம். உயரிய கருவிசைந்து உயிர் தொடுக்கும் பயணர்களின் வளர்ச்சி தன்மையே வாழ்வு மயிரிழையில் ஓடும் உயிர் ஓட்டம் உயிரில் கலப்பின பால் திறனே! நம்பிய கையசைவில் விரைந்த விருப்பம் அம்புக்கணைத் தொடுத்த தொடரே உயிரிசைவு கம்பி போல நீட்டிய நீடிப்பு தும்பிக்கை முனையில் உயிர் வாழும். உள்ளம் உறவாடி மகிழ்ச்சி கொள் பள்ளம் மேடு கொண்ட புவி தள்ளித் தள்ளாடும் தளமே வளம் எள்ளி நகையாடும் போரே போரமைப்பு.