
M.S. உதயமூர்த்தி 95 வது பிறந்தநாள் பதிவு



உதிக்கும் உதயமூர்த்தி எனும் தமிழ்சுவைஞர்
நதிநீர் இணைப்பு நாட்டின் தேவையென
பதிவு செய்த பயணிகளில் ஒருவர்
எதிலெது முடியும் எனும் சொல்லாளரின்
M.S உதயமூர்த்தி 95 வது பிறந்தநாள் பதிவு
“நம்பும் ஆற்றல் வாய்ப்பு மிகும்
அம்புக் கணைத் தொடுக்கும் இலக்கு”
தம்பிகள் வாழ்த்தும் தொடர் பண்புடன்
எம் சேவையும் சேர்க்கும் வளம்.
வளம் தரும் வழிபாடு தொடர்பில்
தளம் மூலப் படர் சூழலில்
களம் காணும் உயிரியத் திறனில்
உளம் கனிந்த இனிய வாழ்த்து.
வாழ்க்கை அறத்தின் நிலைப்புத் தன்மை
ஆழ்ந்த சிந்தனை நேர்மை செயலென
வாழ்ந்து காட்டி வழித்தடம் அமைத்தார்
வாழ்த்தி வணங்கி மகிழு சொல்தந்தார்.
சொல்லொலி குறியீடு எழுத்து முறைமை
வல்லமை உந்தவோர் ஓர் எடுத்துக்காட்டு
நல்லுள்ளம் சொல் தொடுதிரை காட்சி
நல்லாற்றல் சொல்லே
” நம்மால் முடியும்”.
“முடியும் ” என்ற நம்பிக்கை உலவும்
“முடியும் ” என்றொரு மனித வளம்
“முடியும்” எனும் விளக்குத் தொடர்
“முடியும்” எனும் சொல் வேந்தரவரே.
ஏந்திச் செல்வோம் வழி வகுக்கும்
வந்த வழியறிந்த இருப்புப் படைகள்
தந்தி போல் தேவை சேவை
உந்து விசையுடன் வாழ்த்தி மகிழ்வோம்.
என்றும் அன்புடன்
பதிவர்
தங்கவேலு சி
செயல் மன்றம்
seyalmantram.in

சொல்லொலி இயல்
தொன்மை பதித்த பதிவர் தொல்காப்பியர்
பன்மை வடிவ எழுத்துரு சொற்கள்
நன்மை தரும் தொடரே பொருட்கள்
தன்மை கொண்ட பண்பைப் பாடு.
பாடும் பணி ஏற்கும் வகை
நாடும் நாளும் இணையும் இணைப்பு
காடும் மலையும் இயற்கை பங்கு
தேடும் வழிமுறை ஒன்றே ஒன்றும்.
ஒன்றிய யாவும் நேரலைத் தொடர்
சான்றோர் வாக்குப் பதிவே மொழி
நன்றி “ஐயா” என ஒலிப்பும்
ஊன்றி கற்போம் ‘ஐ’ம்புலன்களில் ‘யா’ப்பு.
யாப்பு கொள்ளும் இலக்கு அகராதி
தப்பு இல்லாது கற்கும் சொற்கள்
எப்படி அடையும் வழியென ‘அணி’
ஒப்புதலில் அக்கணமே புரிதலே இலக்கணம்.

புவியடித்தள பறிப்பு
உயிரணு இறப்பு.
புவியடித்தள பறிப்பு
உயிரணு இறப்பு.
நிலத்தடி நீர் காக்கும் புல்வெளி
பலபொருள் ஆக்கம் ஆற்றலே மாற்றம்
நலம் தரும் யாவும் பல்லுயிர்
வலம் இடம் வளரும் தன்மை.
தன்மை கொண்டதே உயிரிய வாழ்வு
நன்மை அடித்தரை வளமை நீரக
மேன்மைத் தோற்றம் புவியினப் பசுமை
இன்பம் துன்பம் ஒருநிலைக் காண்.
காண்பதும் கேட்பதும் உணர்வு கொள்ளும்
உண்ணும் உணவுப் பொருள் உள்ள
மண்ணும் கலப்பில் வளரும் விதையும்
விண்ணின்று பொழியும் மழையின் அளவே.
அளவுகோல் இருப்பு நிலைக் கலம்
வளவு எனும் வளையமே நிற்கும்
பிளவை புவியடிதனில் விரிக்கும் தொழில்
விளங்குமா என்றும் கேள்வியைத் தொடு.
தொடர்ந்த நடை முறைத் தகுதி
கடந்த கால அறிவின் சார்பு
ஊடகம் கொள்ளகம் வீடு பேறுகள்
இடமறிந்து செய்யும் செயலே நிலைப்பு.
நிலைப்பில் நதி செல்லும் நீர்
தலைப் பகுதி மிகுவது ஓடும்
ஆலைத் தொழில் நுட்பக் கழிவும்
கலையினச் சேர்ப்பில் வளமை கொள்வாரோ!
கொள்வார் கொள்வதை கொடுப்பதே நல்சேவை
வள்ளல் எனும் வணிக இலாபம்
தள்ளுபடி விலையில் தருதல் நன்று
கொள்முதல் நிலம் நிலைக் கழிவு நீர்.
நீரும் நிலமுமே மேல்தட்டு அடுக்கு
வாரும் வாயு மண்ணீர் கலப்பு தரும் புவியடி நம்மை கவிழ்க்கும்!
வரும் வருமானமோ! அனைவருக்கும் சுகமோ?
சொற்பொருள் தேடி
சேந்தன் திவாகரம், என்ற
திவாகரர் என்பவராலும்,
பிங்கலம், பிங்கலராலும்
சூடாமணி, மண்டல புருடர்
போன்ற ஆளுமை கொண்ட தமிழி பதிவு ஆகும்.
மொழி இனமாக வாழ்ந்து வந்த மக்களின் தொகுப்பு கொண்டது ஆகும்.
இவற்றையே மேற்கண்ட திவாகரர் என்பவர் நூற்களஞ்சியமாக சொற்பொருளினை ஒன்பதாம் நூற்றாண்டில் தொகுத்து வழங்கினார்.
சேந்தன் என்ற வள்ளல் திவாகரரை ஆதரித்து பேசியதால் சேந்தன் திவாகரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
திவாகரர் என்பதற்கு சூரியன் எனக் குறித்து உள்ளனர்.
கரந்துறை:
கரந்துறை, சித்திரக் கவியில் ஒன்றென திவாகரம் ஒன்றாகும்.
12. பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
‘சேந்தன் திவாகரம்’ என்ற நிகண்டானது, சென்னைக் கல்விச் சங்கத்துத் தாண்டவராயரால் பதிப்பிக்கப்பட்ட பத்துத் தொகுதிகளின் மூலத்தையும், சென்னைக் கல்விச் சங்கத்து வித்துவான்களால் பதிப்பிக்கப்பட்டதாகும்.
பிங்கல, சூடாமணி என்ற நூலின் மூலத்தையும் இணைத்து, 1923-ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த நூலைத் தழுவி கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு வரை நூல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆய்வாளர் பலரால் இந்த நூல் பத்தாம் நூற்றாண்டிற்கு “சேந்தன் திவாகரம் “
என்ற நூலும்,
பின் , பிங்கலம் சூடாமணி என முறைப்படி கருதப்படுகிறது.
சொற்களுக்கு பொருள் தரும் முதல் நிகண்டு ஆகும்.
தமிழில், தமிழி எனும் பதிவில்
கரந்துறை பா:
காலை மாலை ஓலைப்பதிவு கொண்ட தமிழி பதிவு:
“காலை” ‘கா’த்திருந்தே கடலலை’ கண்டோம்
“மாலை” ‘மா’றுமொளியில் அ’லை’யினைக் கண்டோம்
“ஓலை” சுவடிகளில் ‘ஓ’ராயிமாயிரப் பதிவ’லை’
“தலை” ‘தலை’மை தாங்கும் ஆளுமை.
ஆளும் ஆளுமைத் தொகுப்பே பதிவு
நாளும் பொழுதும் நம்பிய செயல்
யாளும் புவியடி ஐந்தடுக்கு சறுக்கு
தாளும் படிப் படியான படிமலர்ச்சி
படித்த கல்வி தரும் நிலை
தேடித் தொடர்ந்தே நூலெனத் திகழும்
நாடிச் சென்று சொற்பொருள் களஞ்சியம்
ஓடி மின்னும் மின்னல் பேரலை.
பேரலை காற்று நீர் தீ
ஆர வடிவ எழுத்துரு சொற்கள்
கரம் கொண்டு உட்பொருள் கை
தரம் உயர்த்த நிலைப் பணி.
–
———————–
ஆளுமை கொண்ட தமிழி பதிவு :
சேந்தன் திவாகரம்
பிங்கல சூடாமணி
12. பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
பக்கம் 110 தலைப்பு
சித்திர கவி வகை இலக்கம் 52:
21 பெயர்கள் கொண்ட ஓசைப் பா
மாலை மாற்றே:
மாலை மாற்றே, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழு கூற்றறிக்கை,
காதை கரப்பே, கரந்துறைப் பாட்டே,
பாத மயக்கே, பாவின் புணர்ப்பே,
கூடசதுக்கம், கோ மூத்திரியே,
ஓர் இனத்து எழுத்தால் உயர்ந்த பாட்டே,
ஒற்றுப் பெயர்த்தல், ஒரு பொருட் பாட்டே,
விகற்ப நடையே வினா வுத்தரமே,
சருப்பதோபத்திரம், சார்ந்த எழுத்தே,
வருக்கமும் மற்றும் வடநூற் கடலுள்
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து மறைத்து மிறைக் கவிப் பாட்டுத் தெரித்துப் பாடுவது சித்திரக் கவியே.
மாலைமாற்று என்பது
ஒரு செய்யுளை ஒவ்வோர் எழுத்தாகத் தொடக்கம் முதல்
இறுதி வரை படித்தாலும், இறுதியிலிருந்து ஒவ்வோர் எழுத்தாகத் தொடக்கம் வரை படித்தாலும் மாறாமல் அமைவது மாலைமாற்று
என்னும் சித்திரகவியாகும்.
எ.கா: விகடகவி
எழுத்து வருத்தனம்
எழுத்து வருத்தனமாவது, யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு மொழியை எடுத்துக்கொண்டு அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள்படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பதாகும்.
“‘ந’ம் மொழி ‘ம’துர உ’ரை’ ஆற்றுபவர் ” என்ற சொல்லில்
நமது மொழிதனில் மதுரமான உரையாற்றும் என்று சொல்லும் சொல்லில் ” மதுரை ” எனக் கொள்ளலாம்.
எமது பதிவு :
கரந்துறை பாவினம் சித்திரக் கவிதை
ஆரம் வட்டம் சதுரத் தமிழி சொற்கள்
தரமிகு விந்தை எழுத்துரு ஒலியன்
கரம் பிடித்து படித்து எழுவகை.
எழும் கேள்விகளில் பதில் வாசிப்பில்
வாழும் நாள் உயிர்த் துடிப்பு
முழு வரிகளில் சொல் முறைமை
தழுவித் தரணியில் காக்கும் பொறுப்பு.
பொறுப்பு கொள்ளும் இணைப்பு வரிசை
நறுமணம் வீசும் காற்றின் மொழி
வேறுபாடு உண்டு ஒன்றினால் ஒற்றுமை
கூறுகள் ஒற்று மிகும் திறன்.
திறன் ஒத்திசைவு பாவின் புணர்ப்பு
கறந்து கலந்து உறையில் திணிப்பு
திறவுகோல் வாயசைப் பாக்களில் தொடரலை
உறவு கொள்ளும் சக்கர உருவெழுத்து.
சமயக் கருதுகோள்:
சமயமெனும் கருதுகோள் சமத்துவ சமூக
சமயுலக சமயமென சமயமுறை சமயநெறியர்
சமயநெறி சமத்துவமென்று
சமயமுற சமமாக சமகாலத்து சமயகப்பதிவே.
சமயமாக சமத்துவநெறி சமயபற்றான சமநெறி
சமமென சமயக்கரு சமமுறவேண்டி சமயகத்தர்
சமயக் காலஅளவில் சமயநேர தளத்தில் சமயகருத்தில்
சமயத்துருவ சமயத்தை பற்றிய நெறியர்.
நெறியறக் கோட்பாடு காலந்தோறும் பின்பற்ற
நெறியாளரென அச்சமய காலக் கடவுளர்
நெறியாளுகை இறையனாக அச்சமய போதகர்
நெறிபோற்ற தரணியில் பின்பற்றும் இறைவனார்.
இறைவன் இயற்கை ஆற்றலில் இயங்கும்
பறை சாற்றி வழிபாடு செய்வது
உறை யிட்ட உள்ளீடு விளக்கம்
மறை பொருள் போக்கே எங்கும்.
சுழளாதாரம் – படரும் கொடி
ஒன்றிய பனிப் பொழிவு உருகி ய
தன்மை முன்னிலை படர்க்கையில் படரும்
இன்மையிலா இலக்கின ஆற்றல் சுழலும்
பன்மை தொகுப்பு பிரிவினை க் கண்டம்.
கண்டம் முற்றும் சுற்றும் பார்
ஆண்டு கணக்கில் சுழலும் புவி
துண்டு துண்டாகும் உள் நிகழ்வே
மண் மரம் செடி நிலை.
நிலைமுறை யாவும் நிலைக் கருவிலி
அலை அலையாய் பனிகப் படிமம்
மலைகள் மேல் உருகும் பனி
இலைத் தளை தழைக்க நீர்த்துளி.
நீர்பனித் துளிகள் பெரும் கடல்
ஊர் கூடும் நிலத்தளமே நாடும்
ஓர் பிடி மண்பயிர் வளர்ச்சி
பார் வையகம் ஒன்றிய உயிரியம்.
உயிரக காப்பு வளியது சூழல்
மயிரிழை இழைந்திடும் உயிரினச் சேர்க்கை
பயிரின வேர் விதையும் தரணி
உயிரினம் காக்கும் வழிவகை படிமலர்ச்சி.
படிப் படியாக உருப் பெறுமதி
ஆடி அசைந்து செல்லும் உயிரினம்
நாடித் தேடி உண்ட உயிர்
ஓடியாடி வேலை செய்யும் வாய்ப்பு.
வாய்ப்பு வாசல் வழிகாட்டிய மரபு
தாய் தந்தை உயிரிய பயணம்
நோய் நொடி அறிந்த மனிதம்
வாய்வழி உணவு உண்ணும் மகிழ்வு.
மகிழ்ந்த சிந்தனை வளரும் தருணம்
ஊகித்து உதித்த மரணம் நொடியும்
பகிர்ந்து உண்ட பல்லுயிர் பெருக்கம்
சகிப்புத் தன்மை முன்னிலை படரும்.
பற்றாக் குறையே அரசுநிதி !
மற்றவை நீளும் வரிவிதிப்பு !!
இயல் இறக்கையில் பறவை பறக்கும்
முயல் தாவும் பற்றும் கிளை
வயல் வெளி எலி கொறிணி
மயில் பறக்க எத்தனிக்கும் சிறகு.
சிறகு கொண்ட ஆற்றல் மிக்க
பறக்கும் நன்கு விரித்து மெல்ல
பறப்ப தெல்லாம் இயற்கைத் தேர்வு
பிறப்பின மாற்றமே காலயெல்லை அறிகுறி.
அறிகுறி எதுவும் தெரியாது தற்குறிப்பில்
பொறி ஐந்தும் இயங்கும் பேசும்
பறிக்கும் நெல்கதிர் அறுவடை காலக்கணிப்பு
பறித்தவுடன் பற்றிக் கொள்ளும் பற்றாளர்
பற்றாளர் பற்றிக் கொள்ளும் நிதி
உற்று பார்ப்போருக்கு நிதியுதவியும் தடுப்பு
ஆரம் வண்டி கண்டு பிடிப்பு
நரம்பு நடு முதுகு தண்டு
கரம் பிடித்து நடுவோர்க்கு தொல்லை.
தொல்லைத் தொடரிலும் தொடர்பிலும் புரிவர்
பார்வை கோடி சிறிய புள்ளி
ஆர்வம் கொண்டு ஆற்றல்மிகுத் திறன்
ஊர்வெளி வான்வெளி நோக்கம் ஏவுகணை
ஏவுகணை பாயும் கூர்மை மிதப்பு
நாவு உயர்வு நவிற்சித் தொடர்
பாவும் பண்ணும் பயிலும் முயற்சி
தாவும் நுட்பம் புவிசார் குறியீடு.
குறியீடு புத்துயிராய் அரசு நிதி
அறிந்து கொள்ளும் அறிக்கை வரிசை
வறியவர்க்கு வரிவிதிப்பும்
பற்றாக்குறை அரசுநிதியும்
ஆறிய கஞ்சியின் வளம் வறியவர்க்கு.

உள்ள உண்மை:
உள்ளது உள்ளபடி உள்ளவை உள்ளாக
உள்ளம் உள்ளும் உள்ளுவது உள்ளாவது
உள்ளுமோ உள்ளாத உள்ளார் உள்வகை
உள்ளுவகை உள்நின்று உள்ளக உள்ளீடு.
உள்ளீடு உள்ளிட்ட உள்ளது உள்ள
உள்ளத்துள் உள்ளுறும் உள்ளதவை உள்ளனவே
உள்ளாற உள்நுழைவு உள்ளப்பாடு உள்ளபடி
உள்நிலை உள்ளிடும் உள்ளுறை உயிரியம்.
உயிரியம் உள்ளதும் உள்ளென உள்ளதாம்
மயிரிழை உள்செல் உள்கொள்ளும் உள்நுட்பம்
உயிரிழை உள்ளதில் உள்செல்லும் உள்ளொளி
உயிரிய உள்பகுப்பு உள்ளதுயிர் உள்ளாற்றல்.
உள்ளாற்றல் உள்ளார் உள்ளே உள்ளமை
வள்ளல் உள்ளத்துளி உள்ளகுருதி உள்பக்கம்
துள்ளல் உள்ள வேகம் உள்ளுறுதி உள்ளன்பு உள்ளகத்தினுள் உள்நரம்பு
உள்துறை
உள்திசை உள்தொடர்பின உண்மையுண்டு.

புவியடித் தட்டு நகர்வு இமயமலை
வங்கம் விரிகடல் கொண்ட புவிக்கோலம்
அங்கம் குடநாடு வளைவிரி குடா
தங்கும் இடம் பெற்ற நிலம்
இங்கு நகரும் வரைப் படம்.
படம் மூலம் சுட்டும் நம்விழி
தடம் புரண்ட களமும் இறங்கும்
உடம் படுமொழி பொருள் விளங்கும்
ஊடகம் கொள்வீர் நீர்நிலம் அறிவீர்.
அறிந்து கொள்வது நம் அகப் பொருள்
வறிய நாடுகள் மத்தியப் புவிக்கோடு
ஏறி இறங்கும் வரைவு மிதப்பது
உறிஞ்சி எடுக்கும் நல்நிர் உடைமை.
உடைமை குடிமை வாழ்வு தரும்
கடை நிலை பெற்றே வளரும்
நடைமுறை அறநெறி அறிவும் நொடியும்
தடை மீறி கற்றோ ரறிவரே.
நலிந்த பிரிவினர் பொறுப்பினை ஏற்பர்
வலிமை பெறும் மனித உயிரியம்
கலிப்பா கொண்டும் நிலை யறிவோரே
தலித் தினமும் தழுவிக் கொள்வீர்.
கொள்ளும் நீர் வைகல்லும் நகரும்
தள்ளும் தரணிக்கு புவியடிப் பேரலை
அள்ளும் அடித்தளம் அரிப்பும் அடக்கம்
எள்ளும் விதையும் மேலும் உயரும்.
உயரும் கடல் அலை மேடான மலையளவு
இயங்கும் தீக்கனல் பொருந்தும் புவியடி
இயங்கும் மேல் வளர் மரம்
இயக்கி நம்மை ஆளும் உயிரகவளி.
உயிரகவளி மேலது நகரும் தன்மை
பயிர் வளரும் புவிமேல் தட்டு
உயிர்க் கருப்பொருள் பற்றும் புரதம்
ஆயிரமாயிர லட்சம் ஆண்டில் நகருமடித்தட்டு.
நகரும் இந்திய ஐந்தடி சதமீற்றர்
தகடு கொண்ட வடகிழக்கு பருவத் திசை
அகண்டு சென்ற திறனில் இமயம்
உகந்தே தள்ளும் புவியடி சேர்க்கை.