நட்பு நாளினில் வாழ்த்தி மகிழ்வோம்.

மொழி முறைமை நிறைந்தவை நட்புலகமே.

நண்பர்கள் கூடுவர் நாடுவர் தேடுவர்
பண்புகள் கொண்டு பகுத்து அறிவது
மாணவர்கள் பருவத்தில் தொடங்கி வளர்வது
ஆண்டுகள் சென்றிடினும்
நிற்கும் நிலைக்கும்.

பற்பல பருவத்தின் பாங்கான பாசமது
சிற்சிலர் சிந்திப்பர் பழகுவர் தொடர்வர்
குற்றம் குறை கண்டும்
காணாது
மாற்று வழியுடன் மாட்சிமை பொங்கும்.

தேவை சேவையெனும் தொழிலும் தொடரும்
பார்வை பலவாறு திருப்பும்
திரும்பும்
இவை இவை வாழ உதவும்
எவை எவையென மலரும் பரவும்.

நாளும் பல நல் நிலை
தோளும் நரம்பும் தவழும்
மகிழும்
ஆளும் அறிவும் ஆற்றலும் அறிவிப்பும்
இளம் வயதுப் பருவமே என்றும்.

இயல்பு பல்கும் நல்லது நல்கும்
பயிலும் முறை நாளும் நட்பும்
ஆய்வு நிகழ்வு மேலும் நடக்கும்
பாயும் பாதையும் பாதுகாப்புடன் பயணிக்கும்.

வாழ்வும் வாக்கும் மனமும் மெய்யும்
ஆழ் கடல் நீர் போக்குடன்
வாழ்த்தி வணங்கி வேருன்றிய பல
மொழி முறைமை நிறைந்தவை நட்புலகமே.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA