இந்து தமிழ் விசை விமர்சனம்

தி இந்து தமிழு விசை விமர்சனம்
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

பெரும்பாலும் தனி மனிதர்கள் நடைமுறை செயலில் இருந்து சொல்லும் கருத்துக்கள் எடுத்துக் கொள்வதில்லை. அந்த தனி மனிதன் சிறப்பு இயல்புகளை, அதிலும் குறிப்பாக விவசாயத்துறையை கண்டு கொள்வது அவரது இறுதி காலங்களில் நோய்க்காக போராடும் பொழுது தான், அவர் செய்யும் செயல்கள் நம் நினைவகத்தில் ஒளிர்விடுகின்றன. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி, இடைத்தரகர்கள் மூலம் விற்கப் படும் பொழுது, விளைபொருட்கள் விளைவதற்க்கான காலம், நேரத்தையும் விலை நிர்ணயித்திற்கு கணக்கிடப்படும் துறையாக, விவசாயம் என்றும் உள்ளது. இதை நெல் ஜெயராமன் அவர்களும் தனது நேர்கானலிலும் தெரிவித்து இருக்கிறார். நம்மாழ்வருடன் சேர்ந்து செய்த களப் பணிகள், பாரம்பரிய நெல் ரகத்தை விவசாயத்தில் பயிரிட்டு நிறைவான சாகுபடிக்கான செயல்கள், விவசாயத்தில் அவர் பதித்த நிலை பெறும் செயல்களாகும்.
அரசுத்துறையில் உள்ளவர்களும், மற்ற நூற்றாண்டு கால சிந்தனை செயல்பாட்டாளர்களும். ஒருங்கிணைந்த நெல் சாகுபடியை மேம்படுத்துவது அவரின் நற்செயலின் தொடராக அமையட்டுமே. வாழ்க அவரின் செயல்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA