ஒன்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு:
கைகொடுக்கும் நம்பிக்கை உள்ளுணர்வின் அறிவு கையாளும்தொடரேதொல்லியல்பின் ஞானம். 
பட்டென அறிந்து செயல்படும்  பட்டறிவு 
பட்டியலிடுமா ? உள்ளும் உயர்வுள்ளலே. 
குறளடி:
ஒன்றுமில்லாத சுழியம்(0) ஒன்றுடன்(1) கூடியொன்றும்
ஒன்றியவுடன் ஒன்பதிலொன்றி(1+1.,) பத்தெனவாகும்(10). 
ஏழ்மையும் ஏற்றம் தரும் வகை 
வாழ்வில் “சேவையே” வைப்பு .
வாழ்க வளர்க நலமுடனே மொழிப          
வாழ்வினச் சேர்ப்பினில் வகுக்கும் வனப்பு 
வாழ்வில் நலம் பலம் பெறும்          
வாழ்க வளமுடன் என்பதும் வகுக்கும். 
வகுக்கும் பொழுது போக்கும் வரத்தும்       
தொகுக்கும் இருப்பிடமும் பட்டியலில் விளங்கும் 
ஆகுபெயர் பொருளொடு மனமும் மெய்யும்        
வகுத்தே தொடுக்கும் நிம்மதி திறனே. 
திறன் தொடர் இலக்கு திறவுகோல்       
அறம் பற்றிடும் பொருளின் சிறப்பு 
பறந்து பொழியும் மேகமாக மேலும்         
கறந்து உறையும் பாலக வீதியே.  
9,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 
ஆப்பிரிக்காவில் உள்ள தற்கால மனிதர்களின் மூதாதையர்களின் மரபணுக்களில் அளவு, பல்வேறு காலநிலையில் குறைந்திருந்த காலம் எனலாம்.
இந்த காலகட்டத்தில்,1,00,000 லட்சம் இருந்தவர்கள் கிட்டத்தட்ட 1,300 நபர்கள் என புலம் பெயர்ந்தவர்கள் குறைந்து காணப்படுகிறது என கருதுகின்றனர்.
கடுமையான காலநிலை மாற்றத்தினால் 1,00,000 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா வரை புலம் பெயர்ந்தோரின் அளவு எனப் பதிந்து உள்ளனர். 
மேற்கு ஐரோப்பாவில் உள்ள மனித இன முன்னோடிகளான  நியாண்டர்டால்கள், டெனிசோவன்கள் மற்றும் கடைசி பொதுவான அடாபுர்கா, ஸ்பெயினில் உள்ள மூதாதையர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கருதப்படுகிறது. (படம்)
பொதுவாக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், மனித முன்னோடிகளாக அடாபுர்கா, ஸ்பெயின் நாட்டில்  உள்ள கண்டுபிடிப்பு மூலம் தீமூட்டும் கருவிகள் கொண்டு (Flint Scrappers)  வெட்டி, பல்வேறு செயல்பாடுகளில் விலங்குகளின் தோலைத் தயாரித்து ஆடைகளாக அணிந்து இருந்தனர்.
பழங்காலக் காலத்திலிருந்து வெண்கல உலோக கருவிகளாகவும், தோல், இறைச்சி மற்றும் தாவரப் பொருட்களையும் மற்றும் வேலை செய்வதற்கு தீமூட்டி சரிசெய்யும் கற்களும் (Flint Scrappers) பயன்படுத்தப்பட்டன. 
கடல்சார் உயிரிய ஓரகத்தனிமங்கள்(Marine Oxygen-MIS), உயிரக-ஓரகத்தனிங்கள் (Oxygen Isotopes Stages-OIS) என அழைக்கப்படுவதும், புவியின் தொல் தட்பவெப்ப நிலைகளை (paleoclimate)சூடான மற்றும் குளிர்ந்த காலங்களை மாற்றியமைக்கும் காலவரிசைப் பதிவாகும்.
அடாபுர்டிகா புதைபடிவங்களில் ஒன்றின் பல்லினாலோ அல்லது பற்சிப்பியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பண்டைய புரதங்களின் சமீபத்திய ஆய்வு,  முன்னோடி தற்கால மனிதர்கள், நியாண்டர்டால்கள் மற்றும் டெனிசோவன்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய “சகோதரி பரம்பரை” என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 
இந்த மக்கள் அனைவரும் நெருங்கிய பொதுவான மூதாதையராக கருதுகிறார்கள்.
பெரும்பாலும், காலநிலை மாற்றம் அவர்களை வெளியே தள்ளியது.
ஆப்பிரிக்காவில் வறட்சி பட்டினிக்கு வழிவகுத்தது என்றும், மனிதர்கள் உலகை ஆராய்வதற்கு வாய்ப்பு கிடைக்காததற்கு முன்பே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் பசுமையானது ஆப்பிரிக்காவில் இருந்து முதல் மனிதர்களை வெளியே இழுக்க உதவியிருக்கலாம்.
காலநிலை மாற்றங்கள் ஆரம்பகால மனிதர்களை ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற்றியது (மீண்டும்) அறிவுசார் மனிதம் (Homo Sapiens) 2,00 000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு படிமலர்ச்சி நிலையில் வளர்ச்சியடைந்ததாக கருதப்படுகிறது.
தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள செவ் பாஹிர் என்ற ஏரியின் படுக்கையில் இருந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மீட்டர் வண்டல் கருக்களை ஆய்வு செய்ய புவி வேதியியலைப் பயன்படுத்தி மேலும் காலநிலை எவ்வாறு மாறுகிறது என்பதைக் கண்டறியலாம்.

