செயல் மன்ற பதிவு

குறள்-நமது குரல்

598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.

விளக்கம் :

அனைத்து வளமும் உடையோம் என்ற பெருமிதத்தை

ஊக்கம் இல்லாதோர் என்றும் பெறமாட்டார்.

சிந்தனை செயலாக்கம் :

உயிர்களின் வளத்தை உணர்த்துவது இயற்கை.

அறிவை ஆக்கப்பூர்வமான செயலுக்கு வித்திடுவோம்.

இலக்கை, இயல்பாக விளக்குவது இலக்கியமே.

காற்று, நில அமைப்பு, சக்தியின் இருப்பிடம்,

விண்ணின் வியத்தகு ஆற்றல், ஒளியின் பயணம்

இவை எல்லாம் கருத்தில் கொண்டால், நம்

வாழ்க்கைப் பயணம் ஒரு தூசி அளவு கூட இல்லை

எனலாம்.

ஆம், ஆக்கப்பூர்வச் செயலை என்றும் வித்திடுவோம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA