குறள் -நமது குரல்

குறள்-நமது குரல்

970.

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு.

விளக்கம் :

தமக்கு இழிவு வருமெனில், உயிர் வாழ விரும்பாதவர்களின்

புகழை , உலகம் தொழுது வணங்கும்.

நினைவகச் செயலாற்றலுக்கு :

தொழில் நுட்பம் நாளும் உலக அறிவை விரிவாக்கி ,

அண்ட பிண்டங்களை அலசி ஆராய்கிறது.

இருந்தும், தற்காலத்திலும் மூட பழக்க வழக்கங்களை

முச்சந்தி எங்கும் விலா வாரியாக விவரிக்கப்படுகிறது.

பானை வரலாற்றை பாங்காக விவரிக்கும்

கோணங்கிகளுக்கு, தம் அண்ட, பிண்டத்தை

அணுகளவாவது சிந்தித்து செயல்படலாமே !

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA