சுழளாதாரம் – மொழி சுற்று
பலர் குறிதனை புரிதலே அறிவது
சிலர் அறிந்ததை மனம் மொழிந்திட
ஆலம் விழுதென அணி வகுத்து
தலம் பற்றி மொழி வளரும்.
வளம் தரும் சொல் முறைமை
களம் காணும் நிலமே அழகு
தளம் ஓடும் அடித்தள நீர்
உளம் நிறைய ஆற்றிடும் ஆறு.
ஆறுதல் பெருகும் வண்ணம் குடிமை
பெறும் பேறுகள் யாவும் நிலைக்கும்
ஏறும் பொருள் ஆதாரச் சுழல்
மறுசுழற்சி சேமிப்பு சூழல்.
சூழல் படிநிலை சரிபார்த்த உரை
உழன்று சுழலும் காற்றின் அழுத்தம்
ஆழ ஊடுருவி நிலைத்து நிற்கும்
வாழ வழி வகுப்பது பதிவு.