முன்னம் மொழி முன்னொலி காலம்

முன்னம் மொழி முன்னொலி காலம்

முன்னம் மொழி
முன்னொலி காலம்.


முன்னம் ஒலி கூறும் மொழி
பன்மை முன்னிலை தன்மை உடையது
இன்மை இல்லா ஒலிப்பின் இனிமை
என்றும் ஒலிக் கோப்புகளின் முறைமை.

முறைமை பழக்கம் பயிற்சி நிலையில்
பறை சாற்றியே வழக்கம் பெற்றது
இறை அருள் பெற்ற அவை
மறை பொருள் கொண்ட விளக்கம்.

விளிம்பு நிலை மக்கள் பற்றி
அளிக்கும் வகை தொடர்பு படிவப்பதிவு
வெளிப்புற உருவச் சேர்க்கை இறைமை
உளி கொண்ட செதுக்கிய சிற்பகலை.

சிற்பம் ஓவியம் கட்டிடக்கலை கோவில்
நிற்பது நடப்பது பறப்பதன் தோற்றம்
கற்பதில் கேட்பதன் கருதுகோள் பொருள்
விற்பன்னர் கையில் சொற்களின் காலமோ!

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: