மனிதம் நாளும் வாழும் மூவாயிரம் கோடிசெல்களே!


இன்று செய்யும் செயலே மூலம்
நின்று நிலைத்த மூவாயிரம் செல்லும்
உண்டு உயிர்ப்பித்த கோடிச் செல்களே!
என்றும் தம் மெய்யுறுப்பின் மனிதவளம்.

ஒரு இருவரின் பருவ உணர்வு
கரு பொருள் தரும் தசை
உரு மாறும் தன்மை கொண்ட
திரு மாந்தரென பெருமை சேர்க்கும்.

பண்பு கொள்ளும் வகை நாளும்
உண்மை தன்மை நின்று நிலைக்கும்
கண்ணும் கருத்தும் மொழியின் ஆக்கம்
ஆண்டு ஆள்வது உறவின் தொடர்பே.

விண்ணகப் பறவை பறக்கும் விமானம்
மண்ணின் துணை மண் பாண்டம்
பண்ணிசை பாடல் வரிகள் யாவும்
உண்டென்ற நீர்நிலை படிமலர்ச்சித் தொடர்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA