உயிரினம் ஒன்று!
இக்கணமே காண்!!
அகழ் பொறி விளக்கு வேளாண்
நிகழ் தொடர் பின் பற்றும்
இகழ் ஏளனம் அக மகிழ்வன்று
புகழ் மிகும் வழங்கும் வளரும்
ஏற்றம் பெற மனித வளம்
மாற்றம் காண்பதே முயற்சி என்போரே
காற்றே மூலம் சுற்றுச்சூழலே
ஆதாரம்
ஊற்றும் ஊறும் நாளும் செயல்படு.
உண்டு உடுப்பதில் தொடங்கிய வாழ்வு
கண்டு பிடித்து கொண்டு கொடுத்ததே
ஆண்டு பலவாறு உழைத்த வாழ்வும்
பண்டுதொட்டு தொடரும் ஏற்றத்தாழ்வும் அகற்று.
மக்கள் யாவரும் ஒன்றெயென கொள்வீர்
ஆக்கம் ஆற்றல் மிக்க தோர்
ஊக்கம் கொண்ட அறிவிலும்
இக்கணமே உணர்விலும் உண்டு எனக்காண்.