சுழளாதாரம் -எணினி வரையறை படம்

சுழளாதாரம் – எணினிவரையறை

அகத்தில் உள்ள எழுச்சி வகை
ஆக்க அறிவு உணர்ச்சி நினைவகம்
உகந்த நேர காலத்தில் புரியும்
ஊகம் கொண்ட தொடர் மதி.

மதிப்பு கூட்டி பொருள் தேடும்
ஆதி அந்தம் தொடர்பு படிவம்
பதிவு பெற்று மனதில் தங்கும்
நதிநீர் ஊற்றுப் போல் செல்லும்.

செல்லும் வழி வகுக்கும் பொழுது
நல்வினை ஆக்கம் தரும் புவிதளம்
பல்பொருள் அறிந்து கொள்ளும் உணவு
நல்ல வேலைத் தொடரே தொழில்.

தொழில் நுட்பம் புவிசார் குறியீடு
வழிவகுத்த நிகழ்வு வணிகச் சேவை
தொழிலாளர் செயல் திறனே நிதி
வழிகாட்டிய அறிவுசார் உரிமை கொள்கை.

கொள்ளும் கொள்ளளவு தொடுதிரை காட்சி
அள்ளி அணைக்கும் சொத்து யாவும்
தள்ளிய கொள்தள மூல
நிறைவே
கொள்ளை இலாபம் பெருக ஈடுபடும்.

ஈடுபடும் பகுதி தொகுதி இருப்பு
பாடுபடும் சிலர் பலத்தின் விளைவு
ஊடும் ஒன்றிய குழு விளக்கம்
நாடு நாடும் நாடிய அரசியலே.

அரசியல் சமூகம் சார்புக் கருவியம்(Hardware)
தரவுத்தள இணைப்பு நீர்மை நிறை(Liquidity)
வரவு செலவு திட்ட விதி
ஆரத் தழுவி எடுக்கும் வரி.

வரி வரிசை வருவாய் வட்டம்
தெரிவித்து மகிழும் வண்ண நலன்கள்
உரிமை விதிப்பு ஒப்பந்த ஆணை
பரிவு கொண்டு பேசும் வழங்கும்.

வழங்கும் வழக்கம் நாணய அலகு
ஆழ ஊடுவிக் கொள்வோர் கொள்வர்
பழகும் வாய்ப்பு வாழும் வாழ்க்கை
கழகம் கட்சிப் பிரிக்கும் வைப்பகம்.

வைப்பகக் குறியிலக்கு
பற்றாக்குறை நிலவும்
ஒப்பி செயலாக்கத் துறை சாரும்
தப்பிய குறியீட்டு அடுத்தொரு பகிர்வு
உப்பி ஆண்டுக்கொரு மறு சீரமைப்பு.

சீர்மை கருதி விளிம்பு நிலையோருக்கென
ஆர்வ மிகுதியில் அணைக்கும் தெரிவிப்பு
தேர்தல் கொண்டே இருக்கும் வாக்கு
நேர்மை சமத்துவ சமயப் பேச்சு.

பேச்சு பேட்டி கண்டு கேட்க
உச்சியில் நின்று உரக்கச் சொல்வர்
பச்சை பொய்யை மறைக்க எதிரியை
உச்சிமுதல் பாதம்வரை நஞ்சு வீச்சு.

வீச்சில் விழும் விழுக்காடு மக்கள்
கச்சை கட்டி தெருவில் தேர்வு
நச்சை புகுத்தி நாசம் நட்டம்
தச்சு வேலைக்கும் இடமும் இல்லை.

இல்லாதோருக்கே இருப்பிடம் என சுற்றி
பல்லுயிர் வளம் சந்ததி விருத்தி
நல்திசை பற்றும் அட்டைப் படம்
கல்விக் கண்ணே திறந்த வைப்பு.

வைப்பக விலை விதிப்பு ஏற்றம்
வைப்பக நாணயம் கொண்டோர்க்கு செல்லட்டும்
வைப்பகநிதி இலக்கு இல்லாதோருக்கு தரநிதியென
உப்பிய சுழளாதார எணினி வரையறையாகட்டும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA