களப்பணி ஆற்றிடும் உள்ளக மெய்யியல்.

களப்பணி ஆற்றிடும் உள்ளக மெய்யியல்.

காய்கனி பழம் செடிகொடி மரம்
நோய்பலவினைத் தீர்க்கும் மருந்து

தாய் தந்தையர் பழக்கவழக்கம் நிரல்நிறை
வாய்ப்பு வளரும் தன்மை நாடும்.

நாடும் அகம் புறம் உள்ளமைவு
தேடும் சொற்பொருள் சார்பும் அமைதி
பாடும் பாடல் பாவினத் தொடர்பு
ஓடும் குருதி வேகம் நாடித்துடிப்பு.

நாடிச் செல்லும் உடைமை அரும்பும்
ஊடிச்சென்று உட்புகும் மாற்றம் புரதம்
ஓடிச்சென்ற புதுப்புது ரகத் தசை
வாடிக்கை ஆளுமை விகித வளர்ச்சி.

வளரும் வளர்சிதைத் தேற்றம் கொள்வினை
தளத்தில் பரந்த உறுப்பின கருப்பொருள்
களப்பணி ஆற்றிடும் உள்ளக உறுப்பினம்
மளமளவென்று
பற்றிடும் பகிர்ந்திடும் மெய்யியல்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA