உயிர் முறைமை

மெய் முறைமை
பருப்பொரு ளாற்றல்.

மெய் இயல்பு இயற்கை இறைமை
     தாய் அளிக்கும் அன்புப் பால்
வாய் மொழி சைகை குறி
      தாயனை ஆறனை  நீர்ப்பசை உயிரியல்.

உயிரியல் இயற்பியல் வேதியியல் ஆற்றல்
     வயிறு இரைப்பை குடல் குருதி
மயிரிழை நரம்புத் தொடரில் தவழும்
      பயிற்சி பழக்கம்  பருப்பொரு ளாற்றல்.

இயக்கம் இயங்கும் முறை தாங்கும்
      தயக்க மின்றிய தரத்தில் மாற்றம்
மயங்கிய மதிப்பும் மதி கொள்ளும்
      உயரிய குடிமை எத்தருணமும்  விருப்பம்.

அறிதல் புரிதலில் நிலைக்கும்  
     மூளைத்திறன்    
பொறி இயல் ஐவகை நிலையம்
     கறிகாய் கனிகள் உணவு உண்டு
      உறிஞ்சும் தன்மை இடமே மெய்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: