ஆழி சுழ் உலகு சுற்றும்
வழிவழியாய் பின் பற்றும்.
விண்மேல் ஓடும் கரு மேகம்
மண்மேல் விழும் துளிநீர் நிலவிசை
கண்மேல் பலன் கிடைக்கும் புவிவிசை
வண்மொழி யாவினும் பெற்றவை யாம்.
யாம் பெற்ற இன்பம் பெறுவதும்
தாம் பெற்று இவ்வையகம் தழைக்க
ஆம் வான் பெற்ற நன்கொடை
நம் கானக முறை முன்னோட்டமே.
முன்னோர் தொகுத்த தொண்டின் தொடர்
பின்னோர் வகுத்த நிலைப்பாடே வழிபாடு
சான்றோர் வாக்கு மூலப்பதிவே மூலத்தொடர்
ஆன்றோர் கற்றவை பெற்றவையே வாழிடம்.
வாழிடம் உயிரின் உயிரே வளர்நிலை
தொழில் முயற்சியே மூலதனத்தின் இருப்பு
ஆழி சுழ் உலகு சுற்றும்
வழிவழியாய் பின் பற்றும் பழக்கம்.