75,000 ஆண்டுகளுக்கு முன்பு – தொடக்க கால நகை வணிக நடைமுறை

75,000 ஆண்டுகளுக்கு முன்பு – தொடக்க கால நகை வணிக நடைமுறை

75, 000 ஆண்டுகளுக்கு முன்பு

தொடக்க கால நகை வணிக நடைமுறை

முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகளின் வகை மாற்றங்கள் (ப்ளோம்போஸ் குகை, தென்னாப்பிரிக்கா)

பழமையான நகைகள்:

இதுவரை கண்டறியப்பட்ட பழமையான நகைகளில் சில, 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய கடற் நத்தை ஓடுகளால் செய்யப்பட்ட மணிகள் ஆகும்.

இவையே மனித வரலாற்றில் அடையாளத்திற்கான தொடக்க கால சான்றுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

ப்ளோம்போஸ் குகை:
தென்னாப்பிரிக்காவின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ப்ளோம்போஸ் குகையில், சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த, மெருகூட்டப்பட்ட மற்றும் துளையிடப்பட்ட கடல் நத்தை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொருட்களின் பயன்பாடு:

அக்காலத்து நகைகள் எலும்பு, கல் மற்றும் பற்கள் போன்ற கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.

ப்ளோம்போஸ் குகை மற்றும் முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகள்

கலை மற்றும் அடையாளங்கள்:

ப்ளோம்போஸ் குகையில் காணப்பட்ட கிளிஞ்சல் மணிகள் வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல. அவை அடையாளப்படுத்துதல், சமூகத்தின் அங்கமாக இருத்தல், மற்றும் தொடர்பு கொள்ளுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த மணிகள் அணிபவர்களின் குழு அடையாளத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.

சிவப்பு காவிப் பூச்சு:

ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட, ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.

உருவாக்கும் நுட்பம்:

மணிகளை உருவாக்குவதற்காக, நத்தை ஓடுகள் கவனமாகத் துளையிடப்பட்டு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு நெக்லஸ் அல்லது வளையலாக மாற்றப்பட்டன.

இந்த நுட்பமான பணி, அக்கால மனிதர்களின் சிக்கலான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் திறனைக் காட்டுகிறது.

கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம்: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த கலைப்பொருட்கள், மனிதர்களின் படைப்பாற்றல் மற்றும் சமூக நடத்தை குறித்த முந்தைய கருத்துக்களை மாற்றியமைக்க உதவியுள்ளன.

இந்த கண்டுபிடிப்புகள், தற்கால மனிதனின் அறிவாற்றல் படிமலர்ச்சி நிலைபற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளன.

ஒரு நொடி பா தொடரியல் :

தகைசால் முறை வாழ்வுத் தொடக்கம்
வகைச் சார்பில் அடங்கும்.

தகைமை நேர்மை அறம் சார்ந்தவை
வகை பாடும் பாடலின் மூலம்
குகை வாழ்வின் தொடங்கிய பின்
முகைத் (அரும்பு) திணை சமூகத் துறை.

துறை யாவும் இலக்கினை நோக்கும்
பறை சாற்றி வழிபடும் முறை
மறைபொருள் உருவாகி சேவை சேர்க்கை
உறைவிடம் ஆடை ஆபரணம் தொழில்நுட்பமே.

தொழில் நுட்ப கலவை இலக்கில்
வழி வழியாய் மலரும் மரபினம்
வழிகாட்டியத் தொடர்பு வடிவ வேலைவாய்ப்பு
ஊழியருடன் உள்ளவை கருத்துக் கோவை.

கோவை’ ‘கோ’ர்த்த ‘வை’யகத் தொடரியல்
அவையே முறையான வாழ்வும் வாக்கும்
இவையே உலகின் நிலைத் தொடர்
எவையென குறியிடும் மொழிப் பாங்கு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்