65,000 ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சமநிலை கோட்பாடு
65,000 ஆண்டுகளுக்கு முன்பு
பண்டைய காலத்தில், வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நிலப்படம் சமமாக தெற்கு அரைக் கோளத்திலும் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததால்தான் புவி சம நிலையாக இருக்கும் என்று மக்கள் நம்பினர்.
ஜேம்ஸ் குக் மற்றும் பிற ஆய்வாளர்கள் இப் பகுதியைக் கண்டறியும் வரை, இது வரைபடங்களில் “அறியப்படாத நிலம்” (Incognita) என்றே குறிக்கப்பட்டது.
65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியா தீவுகள் இணைந்த காலம் என குறிப்பிடப்படுகிறது.
“ஆசுதிரேலியா” (Australia) என்ற பெயர் “ஆசு திரேலிஸ்” (Australis) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது.
இதற்கு “தெற்கு” (Southern) என்று பொருள்.
பண்டைய கண்டத்தை (ஆஸ்திரேலியா, நியூ கினியா, டாஸ்மேனியா) குறிக்கும் “சாஹுல்” என்ற சொல் இந்தோனேசிய வேர்ச்சொல் ஆகும்.
‘சாஹு’என்பதிலிருந்து வந்தது , இதன் பொருள் ‘வெள்ளை’ அல்லது ‘சுத்தமான’, இது தெளிவான நீர்/மணலைக் குறிக்கிறது.
புவியியல்:
இது ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் டாஸ்மேனியாவை இணைத்து, தற்போதைய ஆஸ்திரேலியாவை விட பெரிய பரப்பளவை உருவாக்கியது.
2.
உருவாக்கம்:பனிப்பாறை காலங்களில் உலகளாவிய கடல் மட்டங்கள் வியத்தகு முறையில் (120 மீட்டர் வரை) குறைந்து, கண்டத் தட்டுகளை வெளிப்படுத்தும் போது உருவாக்கப்பட்டது.
3.
மனிதர்களுக்கான முக்கியத்துவம்: ஆசியாவில் இருந்து ஆசுத்திரேலியாவிற்கு தொடக்க கால மனித இடம் பெயரினை எளிது ஆக்கியது.
சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இருப்பை குறிக்கிறது.
கடந்த பனி காலத்திற்குப் பிறகு உயர்ந்து வரும் கடல் மட்டங்கள் தாழ் நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, இன்று நாம் அறிந்த தனித்துவமான நிலப் பரப்புகளாகப் பிரிக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் ஆசிய நிலப் பரப்பில் சுந்தாவில் இருந்து வேறுபடுகிறது.
கடல் மூடி நிலம் விரியும்
உடல் தாங்கி உயிர் பெருகும்
மடல் எழுதி மாண்பு சிறக்கும்
ஆடல் கலைகளில் ஆயிரம் விளங்கும்.
விளங்கும் நிலவியல் நீரியியல் நிலப்பரப்பு
உளம் கனிந்த இனிய காலை
தளம் ஒன்றில் பதிந்து பழகும்
வளம் தரும் வரலாறு மாநிலம்.
மாநில மனித இனம் நிமிர்நடை
ஆநிறை செல்லும் வளநாட்டுத் தீவு
விநியோக நீர்ப்பிடிப்பு ஆற்றல் மிகும்
மாநிலக் கண்டம் ஆசுத்திரேலியா நிலப்பரப்பு.
நிலப்பரப்பு நீர்வாழ் மலைத் தொடர்
நிலம் அழகு நீர் வளம்
உலக அளவில் செழிப்பான பகுதி
உலவிய ஆதி மனிதர்களின் வாழ்வு.
