1,60,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு –
உணரும் உறவுத் திறன் மேம்பட்ட காலம்.எனலாம்.
ஆம், தற்கால கண்டுபிடிப்பின் மூலம் தென் ஆப்பிரிக்காவில் அறிவுசார் மனித இனம், 164,000 ஆண்டுகளுக்கு முன்பு – உணரும் திறன் தொடங்கிய காலம் என்போம்.
கடலோர மீன்கள் பயன்பாடுகள் குறித்தும் இப்பதிவில் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பினால் மனிதர்கள் கடல் உணவுகளை உட்கொண்டதற்கான தொடக்க கால ஆதாரங்களை சுமார் 40,000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுகிறது.
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி காலத்தில் இந்த நடைமுறை அவர்களின் உணவு மற்றும் உயிர்வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கலாம்.
சிறிய கல் கத்திகள் மற்றும் குருதி படிவங்கள் போன்ற பிற கலைப்பொருட்களுடன் மட்டி மீன்களின் கண்டுபிடிப்பு, வள மேலாண்மை பற்றிய வளர்ந்த புரிதலையும், கடல் வளங்களை கொண்ட வாழ்வாதாரக் குறியீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான திறனையும் குறிக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பில் சிறிய கல் கத்திகள், சிவப்பு நிறப் பாறைகள் வண்ணப் பூச்சு கொண்டு கொட்டகைகள் உள்ளது என அறிவித்து உள்ளனர். இக்குறியீடுகள் பல்வேறு செயல்பாடுகளையும் பயன்பாட்டைக் குறிக்கிறது.
மேற்கு மத்தியதரைக் கடலில் இருந்த புது வடிவ மனித இனம் 160,000 ஆண்டுகளுக்கு முன்பு, அறிவாற்றல் வளர்ச்சியை அதிகரிக்க மட்டி மற்றும் மீன்களிலிருந்து கொழுப்பு அமிலங்களைப் பயன்படுத்தினர் .
இந்த DHA அதாவது உணரும் உறவினத்திரவம் (டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம்), ஒரு நீண்ட சங்கிலி, அதிக நிறைவுறா ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும் .
இது செல் சவ்வுகளின், குறிப்பாக மூளை மற்றும் கண்களின் ஒரு முக்கிய அங்கமாகும்.
DHA ஆறு சிஸ்(Carcinoma in situ)எனும் இரட்டை பிணைப்புகளுடன் முதன் முதலில் மனித இனத் தொடர்
22 கரியமில சங்கிலியைக் கொண்டுள்ளது.
கரிம வேதியியலில், ஒரு சிஸ் இரட்டைப் பிணைப்பு (சிஸ் ஐசோமர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இரட்டைப் பிணைப்பின் ஒரே பக்கத்தில் இரண்டு ஒத்த அல்லது ஒத்த குழுக்கள் அமைந்துள்ள இரட்டைப் பிணைப்பைக் குறிக்கிறது .
“சிஸ்” என்ற சொல் “இந்தப் பக்கத்தில்” என்று பொருள்படும் லத்தீன் வார்த்தையான “சிஸ்” என்பதிலிருந்து வந்தது.
இது “டிரான்ஸ்” இரட்டைப் பிணைப்புடன் முரண்படுகிறது.
அதாவது , அங்கு ஒரே குழுக்கள் இரட்டைப் பிணைப்பின் எதிர் பக்கங்களில் இருக்கும்.
மூளை திசுக்களில் இந்த கொழுப்பு அமிலங்களை திறம்பட செயலாக்கி இணைப்பதற்கான திறன் ஆரம்பகால மனிதர்களுக்கு ஒரு அறிவாற்றல் நன்மையை அளித்து, மாறிவரும் சூழல்களுக்கு ஏற்றவாறு மற்றும் சிக்கலான சமூக கட்டமைப்புகளை வளர்ப்பதில் அவர்களின் வெற்றிக்கு பங்களித்தது.
DHA, அல்லது டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம், மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு அவசியமான ஒரு வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு . இது சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களிலும், மீன் எண்ணெய் வளர்ச்சிக்கு, அறிவாற்றல் பிணைப்பு, ஆல்கா எண்ணெயிலும் காணப்படுகிறது.
DHA மூளை ஆரோக்கியம், பார்வை மற்றும் ஒட்டுமொத்த இருதய செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கரு மற்றும் குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில் மூளை வளர்ச்சிக்கு அவை மிகவும் முக்கியமானவை.
அந்தாதி எதுகை பாடல் ‘உயிரினத்தொடர்.
காலநிலை மாற்றம் நாளும் திகழ்வது
உலக உயிரினநிலை கடலில் தொடங்கியதை
பலரும் அறிந்த நடைமுறை அறிவு
உலகியல் யாவிலும் புவியடி நிலையறிக.
நிலையடி நகரும் மேலடுக்கு அமைவு
அலையில் நிகழும் கடலடி நிகழ்வும்
தலைமுறை காணாத காட்சி கருத்தியல்
மலையும் நகர்ந்த இமயமென கண்டறிவாயா!
கண்டறிதல் என்பதே நிலைப்படும் குறியீடு
துண்டு துண்டாய் பிரிந்த நிலப்பகுதி
உண்டு உடுத்திய வரலாறே காலவரையறை
நீண்ட கால குறியீட்டினை புரிந்திடு.
புரிந்து கொள்ள முடியாத பதிப்பும்
வரிவரியான எழுத்துருவும் பேசியதன் தொடக்கமே
பரிபாடலும் வளமும் நலமும் கலையறிவே
உரிய உயிரக மெய்பொருளே அறிவாற்றல்.