1,05,000 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலை கற்காலம் என்றும் அழைக்கப்படும்.
இக்கால மனித மெய் இயல்பான தோற்றம் கொண்ட மனிதர்கள் என அறிவாசார் நிலையில் வகைப்படுத்தலாம்.
அறிவுசார் நிலை ‘கல்’லில் ‘வி’ளக்கமாக பெறும் ‘கல்வி’ எனலாம்.
‘கல்’லில் ‘கரு’த்து ‘வி’ளக்கம் ‘கருவி’ .
பிற்காலத்தில் கல் கருவிகளாக பயன்படுத்தி, தொழில் நுட்பம் மற்றும் வேட்டைக்கு உதவியது.
நடுநிலை கற்காலம்: சுமார் 300,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த இந்த கால கட்டத்தில் மனித அறிவு சார் எழுச்சியையும், முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட கல் கருவி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் கண்டறிந்ததைக் காணலாம்.
இந்தக் காலகட்டத்தில், மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி ஆசியா உட்பட உலகின் பிற பகுதிகளுக்கு தங்கள் பரவலை விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர் என பல்வேறு மனித பரவல்களின் சான்றுகள் தெரிவிக்கின்றன.
கல் கருவி தொழில்நுட்பம் நடுநிலை கற்காலம் லெவல்லோயிஸ் நுட்பத்துடன் தொடர்புடையதாக கருதலாம்.
இது கூர்மையாக, கணிக்கக்கூடிய கல்லினை செதுக்கி கூராக உருவாக்கி முறை படுத்தினர்.
இம்முறை பல்வேறு பணிகளுக்கான பரந்த அளவிலான கருவிகளை உற்பத்தி செய்ய வழிவகுத்தது.
நியண்டர்தால் மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பும் அறிவுசார் மனித நிலைக் குழுக்களும் உருவாகி வந்த அதே வேளையில், இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் நியண்டர்தால்கள் , அறிவுசார் நிலையில் நிமிர்ந்து நிற்கிற நிலை முழுமை அடைந்தனர்.
இதற்கு சில சான்றுகள் இரு குழுக்களுக்கிடையில் நேரடித் தொடர்பும் மற்றும் இனப்பெருக்கம் கூடும் நிலையில் இருப்பதைக் குறிக்கின்றன.
தென்னாப்பிரிக்காவின் கலஹாரியில் உள்ள கா-மோஹானா ஹில் நார்த் ராக்ஷெல்டரில், ஆராய்ச்சியாளர்கள் 105,000 ஆண்டுகள் பழமையான கால்சைட் படிகங்கள் மற்றும் தீக்கோழி முட்டை ஓடு துண்டுகளைக் கண்டறிந்தனர்.
இது அந்தப் பகுதியில் தொடக்க கால மனிதர்கள் கடற்கரையில் இருந்தவர்களைப் போலவே புதுமையானவர்கள் எனவும் குறிக்கிறது.
வெட்டப்பட்ட விலங்கு எலும்புகள் மற்றும் பிற கலைப் பொருட்களின் படிகங்களும் இன்றைய காலத்தை விட மிகவும் ஈரப்பதமாக இவ்விடத்தில் காணப்பட்டதாக தரவுகள் மூலம் அறியலாம்.
இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தக் காலகட்டத்தில் கலாச்சாரப் புதுமை கடலோரப் பகுதிகளை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது என்கின்றன.
ஓர் நொடி பா ‘முழுமை”
அறிவு நிறைவு வாய்ப்பில் முழுமை
மாறி வழங்குவது முதுமை
ஓர்ப்பு(Bright) ஓர் அறிவு நிறை
ஈர்ப்பு நிறைவு பெறும் வாய்ப்பு
வார்ப்பு வடிவ அமைப்பு முறை
கார்ப்பு சுவையுள் கார உணவு.
உணவு உண்ணப்படும் வினைத் தொகை
கணம் திரண்டோர் நொடிப் பொழுதும்
குணம் நலமாய் மேன்மையில் தங்கும்
நாணயம் மாற்றுமுறை ஐம்புலனில் அடங்கும்.
அடங்குதல் உட்சுழற்சி உட்சுருள்வு உட்பிதுக்கம்
கடந்து செல்லும் செயல் திறன்
உடனுக்குடன் செறித்து செல்லிடை நுணுக்கம்
அடம்பிடித்து உண்ணும் பொருள் மெய் இயல்பு.
இயல்பு நேர்மை நுண்மையின் கூர்மை
ஆய கலைகள் எழுதும் இலக்கணம்
இயல் இசை படம் பிடிக்கும்
இயற்பியல் இயற்கை ஆற்றலில் அறிவோம்.