புவியறிதல் நம்நிலையறிதல் 
விண்ணசைவில் எழும் இப்புவிச் சுற்று 
     மண்ணசைவில் பருப்பொருள் வேற்றுமை பெறும் 
கண்ணசைவில் காணும் இன்பம் கோடி 
       உண்ணசைவில் பல்லுயிர் உன்னுள் காக்கும். 
காக்கும் படை அமைவு வழிகாட்டி
       தாக்கும் தரணி கால வரையறை
நோக்கும் போர் களம் காக்குமா?
      வாக்கின் தன்மைதான் தரம் குணம்.  
குணம் கொண்ட தொடர் மதி
     கணம் உள்ள நிலை கல்வி
மணம் புரிந்து கொள்ளும் வண்ணம்
     அணம்(அண்மை) இலக்கு இலக்கணம் கூறும். 
கூறும் வகை மெய் அறிவது
     ஆறும் அதனதன் தொடர் அறிவது
உறுப்பு நாளம் தசை அறிவது
     சாறு பிழிந்து மொழி பலரறிவது. 

