புவி நடப்பில் பனியுருகும் காலமொன்று
கவிகை சுழல்காற்று புறத்தேற்றம்.
புவி நடப்பில் பனியுருகும் காலமொன்று
     கவிகை(வளைவு) சுழல்காற்று(வளி) பிதுக்க புறத்தேற்றம்(திரையுரு)
ஏவிய காலநிலை  பல்லாண்டு மாற்றம்
      கவியிலும் வடிவ வரையறை வட்டம். 
வட்ட உருவநிலைச்
சாய்வு சுழற்சி
      விட்டத்தில் இயங்கும் கதிரியக்கத் திறன்
தட்பவெப்ப நிலையில் வாழும் நிலைப்பாடு
     உட்புற நிகழ்வில் கரியகச் சுழற்சி. 
சுழலும் புவியடி அச்சுச் சுற்று
     சுழற்சி முறை மையப் பெயர்வு
சூழலியல் நீள்வளைய வடிவ இழுவை
      சுழல் தூரச் சுற்றிலும் கதிரொளி. 
கதிரொளிச் சுழற்சியில் புவியியலும் சுற்றளவே
     அதிவேக கால விரைவுப் போக்குவரத்து
உதித்த  இயக்க இயற்பியலும் இயற்கை
     பதித்த கல்வியலின் கால கருதுகோளே!

