ஒரு நொடி பா ‘மின்னாற்றல்’

ஒரு நொடி பா ‘மின்னாற்றல்’

அன்று அன்று அமைவது நன்று
சென்ற அவற்றின் சுழற்சி.

அன்றமை(காற்று) சுழற்சி முறை இலக்கு
நின்றமைந்த வளி(வானிலை) வெளிச் சுற்றும்
சென்ற வளைவு சூறைக் காற்று
நன்கு பற்றும் காற்று வளிமம்.

வளிமம் படரும் ஆவித் தொடர்
வெளிப்புறத் தொடர் புவியில் வெம்பாவி
ஒளிகூட்டி ஏனத்தின் உருவாக்கம் இட்லி
பளிச்சென்ற புயல் இடியில் மின்னல்.

மின்னல் மழை முகிலில் மின்னொளி
மின்னஞ்சல் முகவரியில் அனுப்பும் பதிவும்
மின்காந்த அலைவரிசை ஒளி ஒலிப்பு
மின்சாரக் காந்தப் புலத்தில் மின்னாற்றல்.

மின் ஆற்றல் நிலை முழுமை
மென்பொருள் இணையம் பயிற்சி ஊடகம்
வன்பொருள் மைய செயலகம் நினைவகம்(RAM)
மின்னியல் மின்னூட்டம் மின்புலத்தின் பயன்பாடு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்