ஒரு நொடி பா ‘படை’
படை தடை கடை அடை
எடை உடை நடைமுறை
ஆடை மறைக்கும் வண்ணம் உள்ளம்
மடை திறக்கும் நீர் வழி
ஓடை வழி பெருகும் வயல்வெளி
இடைவெளி இன்றி ஒன்றும் இணைப்பு.
இணைப்பில் உள்ள பரவல் காண்பது
அணைப்பில் மலரும் மகிழ்வுத் தோற்றம்
கணைத் தொடுப்பில் கண்ட மலர்ச்சி
ஆணை பிறப்பித்த பணியில் சேர்ப்பு.
சேர்ப்பதில் உலவும் தென்றல் காற்றும்
ஓர் விண்வெளி பாலக வீதி
ஊர் எங்கும் நலமும் வளமும்
பார்வை சார்ந்த பழக்கம் வழக்கம்.
வழக்கம் போல் இயங்கும் இயற்கை
அழகு அறிவு அன்பில் சாரும்
மழலை மொழி பேசும் தன்மை
பழகிய நிலையில் இன்பம் காண்போம்.