ஒரு நொடி பா படர்க்கை

படர்க்கை ‘வி’னை ‘நா’ளும் ‘கா’க்கும்
இடர் நீக்கும் காப்பு.

பலப்பல ஒரு சிறு பகுதி
சிலர் கருதுகோளில் தொல்காப்பியம் கூறும்
உலவும் தென்றல் காற்று மூலமும்
பலர் தொகுப்பில் எழும் இலக்கு.

இலக்கிய உலகில் உள்ள பரவல்
நலமுடன் வாழ வேண்டும் என்பதே
மலர் போல் தொகுக்கும் வாழ்வும்
வலமிடம் செல்லும் குருதிச் சேர்க்கை.

சேர்க்கும் வையகம் வானம் உயிர்த்திறம்
பார்வை இயற்கை காட்சியின் பங்கு
ஓர் சிறந்த புணர்ச்சி விதி
ஈர்ப்பு விசை மீட்சி குணகம்.(கூடும்)

குணகம் மோதல் பிரியாது ஒட்டும்
இணங்கி இயங்கும் இயக்கவியல் முறை
கணம் மெய்க்கோள் அடிப்படை அகப்பொருள்
மணம் கூடிய மதிப்பு நன்னிலை.

நன்னிலைத் தவ நிலைமை உயர்
இன்னிலை இல்வாழ்க்கை பண்பும் பயனும்
தன்னிலை விளக்கம் இயல்பு நடுநிலை
முன்னிலை ஒருமை பன்மையில் படர்க்கை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்