ஒரு நொடி பா ‘நாளது’
உயிரினத்தின் வாழ்வு நாளது பேச்சும்
உயிரின எம்மினக் குறியீடு.
உயிரின் உயிரில் எம்மினமே வகுத்த
ஆயிரம் முறைமை படிவக் குறியீடு
உயிரின உறுதியுரை வாக்கில் பேசும்
உயிரினத்தின் வாழ்வே நாளது பேச்சும்.
பேச்சு வழக்கில் பழக்கம் என்பது
மூச்சுக் காற்றில் நொடிக்கொரு சான்று
அச்சில் வந்த மரபுசார் வடிவமே
பச்சிளம் குழந்தை வாய்மொழியுள் தாய்மொழி.
தாயின வளர்ப்பு பேச்சு மொழி
ஆயிரமாயிரம் வரையறை மக்களின தொடர்பு
பாயிரப் பயிற்சி மூலத் திட்டமும்
தாயின் தாயனை ஆறனை உயிரினமே.
உயிரினம் யாவும் மரபினக் கீற்றுகள்
பயிற்சியில் பழகி தொடுத்த தொழில்நுட்பமே
மயிரிழை உருவகப் பிறப்பின வேற்றுமை
உயிரினத் தரத்தை உயர்த்தும் உறுதிப்பாடு.