ஒரு நொடி பா ‘காப்புறுதி’
மதி விதி நிதி நதி
மதிப்பில் உதிக்கும் நிதிநிலை.
மதி மதிக்கும் மனித திறமை
விதி விதிக்கும் வினைத் திறன்
நிதி நிதியுதவியின் நிலைப்பு திசை
நதி நலமிகு திறந்த வெளித் திட்டம்
திட்ட வடிவமைப்பு திட்டமாகும் நிதியியல்
வட்ட வடிவில் செயல் படும் நடைமுறை காப்புறுதி
ஊட்டச்சத்தே உயர் உயிர்ப்பு மெய்யியல்.
மெய் நாடி உறுதி செய்யும்
உய்ய உயரும் வாழ்நாள் முழுதும்
ஓய்வு பணியும் சேவை புரியும்
வாய்ப்பு பெற்று மதிப்பில் மலரும்.
மலரும் முகம் பார்க்கும் காலம்
பலரும் செழிக்க வேண்டும் என்பதே
உலகின் உயர்வு உண்மை நடைமுறை
உலவும் தென்றலும் ஊரும் காக்கும்.