ஒரு நொடி பா ‘ஈருருளி’

ஒரு நொடி பா ‘ஈருருளி’

ஊர்ந்து செல்லும் வாய்ப்பு எல்லை
ஊர்தியில் மின் ஈருருளி.

ஈர் சேர்க்கும் ஈரப்பதம் முன்னிலை
நீர் சேர்த்து உருகிடும் பனியாறு
யார் யாரோ கோர்க்கும் பணியால்
ஊர் சேர ஒன்றிழுக்கும் ஊருருளி.

ஊருருளி ஈர்ந்து நிலத்தோடும் நெய்ப்பு
இரு உருளி உருண்டு திரளும்
பருப்பொருள் சார்ந்த நகர்வு வீதியிலோடும்
உருப்பொருள் வாங்கும் திறன் சமநிலை.

சமநிலை நிலையொத்து ஏறிச் செல்லும்
நமது நாட்டின் ஊர்தி வாய்ப்பு
அமர்வு விசை மீட்சி அலகுகள்
நமக்கு ஓர் சிறந்த தொடர்வண்டி.

தொடர்ந்து செல்ல சகடி நகர்வு
இடப் பெயர்வில் தொழில்சார்பு வண்டி
தடம் பதிக்கும் பணி உலகெங்கும்
கடந்து செல்ல மின்பகுபொருள் ஈருருளி.

ஈருருளி எனும் மின்கலம் நேரெதிர்
இரு வேறுபட்ட கூறுகளின் சேமிப்பு
அருகிய வரட்டுக்கல இடமிடைஞ்சல் பொருளாகும்
உருப்படி நிலையில் நிறுமம் நிலைக்கும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்