ஒரு நொடி பா ‘இளமை’

ஒரு நொடி பா ‘இளமை’

பால் பிறை தேடும் பொறியியல்
கால் பதிக்கும் பணிப் பருவம்
இல்லம் தாண்டி பழகும் வாய்ப்பு
வல்லமை கொண்ட வரையறை வட்டம்.

வட்ட வடிவில் இருக்கும் நாளும்
கட்ட அமைப்பில் இருந்து முழு
விட்டத் தளத்தில் புள்ளி இயல்பு
பட்டம் பட்டறிவு நடைமுறைப் பயன்.

பயன் புலனறிவு சமூகப் பணி
ஆயகலைகள் அரங்கில் திறன் நுண்ணறிவு
வயல்வெளி முதல் விண்ணுலக நம்பிக்கை
பயன்பெறும் வகையில் பரவும் தன்மை.

தன்மை முன்னிலையில் படர்ந்து வளரும்
நன்மை பலவும் செல்லும் திசை
பன்மைத் தொடர் தொகுப்பில் நிலவும்
என்றும் அமைய முடியும் பண்பாடு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்