நன்று எக்கணமும் வல்லமை பெறும்      நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம்

நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம்.

நன்று எக்கணமும் வல்லமை பெறும்
      நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் .

நன்று நோக்கினில் நாளும் கூடும்
     நன்று செயல்படின் அறமும் ஆக்கமுறும்
நன்று எக்கணமும் வல்லமை பெறும்
      நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் .

பேரண்டம் பெரும் பொழுது சிறு
      அரங்க கதிரவன்
புவிவளி உயிரக
நீரக சுழற்சி முறை விதைப்பில்
     பரந்து விரிந்த விண்மீன் வரம்பு.

வரம் தரும் பயண நெறிமுறை
     மரபுவழி கூட்டில் மேன்மை பெருகும்
அரசிலும் சிறப்புற வேண்டிய தேவை
   உரசிப் பார்த்து தேர்ந்தெடுக்க ஆட்சிமுறை.

ஆட்சிமுறை குழு உறுப்பினர் தேர்வு
     நாட்டு உடைமை வாய்ப்பில் உண்டு நாட்களிலும் நல்ல உரிமை சேர்க்கும்
     ஓட்டுக்கு மயக்கும் திட்டம் உருபெறுமா?

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA