மங்கல தமிழாண்டு வாழ்த்து மடல்
மங்கல தமிழாண்டு வாழ்த்து மடல்
மங்கல ஆண்டு வாழ்த்து மடல்
திங்கள் தோறும் வாழும் வாழ்வு
அங்கம் வகிக்கும் நற்பணி இயல்பு
தங்களுடன் பதிவதில் மகிழும் உள்ளம்.
உள்ளத்தின் உறுதி செயலுடன் ஆற்றல்
பள்ளம் மேடு பார்த்து நிமிர்நடை
அள்ளும் பகலும் அலைந்து புரிந்த
கொள்ளும் அளவு நீரகம் உள்ளகம்.
உள்ளகம் கொண்டே உயிரதன் உணர்வு
அள்ளி அணைத்திடும் அன்புடன் கூறும்
துள்ளல் பெருமகிழ்வு மனித உயிரியம்
உள்ளிட்ட அறிவின குறியீடு தோன்றும்.
தோன்றும் முன் படக் காட்சி
அன்று முதல் அசைவில் ஓசை
நின்று நிதானித்து புரியும் படிநிலை
ஊன்றிய குறியீட்டில் ஒன்றி அறியும்.
அறிந்து கொள்வன ஆறுதல் கூறும்
கறிகாய் கொண்டு உண்ட உணவு
வறியவை போக்கிய திணைத் துறை
பறித்துண்ண செடி
கொடி கனிகள்.
கனிகள் விதைகள் மூலமே நாளும்
இனியவையே என்று சொல்லும் அளவு
பனிக்கட்டி உடைந்த நீர்த்துளி
நனிசுவை உணர்வு தம்மிதழ் ஒலிக்கும்.
ஒலிக்கும் ஒலி உள்ளெழும் குறியீடு
ஒலியோசை அறிந்தவை பாடலில் வரும்
ஒலியினில் எழும் புரிதலே மொழி
ஒலிப்பு முறையில் இனமொழி மரபு.
மரபு வழி இலக்கு இலக்கியம்
இரவு பகல் ஒளிரும் கலைத்
தரம் உயர்த்தி காதல் கொள்ளும்
வரிசை கட்டி வளரும் தலைமுறை.
தலைமுறை தழைக்க வேண்டிய கணம்
அலை அலையாய் வீசும் காற்றில்
வலைப்பதிவு தேடல் வினவல் இலக்கணமும்
கலைச் சொல்லும் அக்கணமே தமிழருவி
தமிழி எழுத்துருவில் அருவி போலிசை
உமிழ்நீர் சுரப்பில் வாயசைவில் இசைவோம்
தமிழ் சொல்லில் மங்கல பொழிவுடன்
தமிழ் பாயிரத்தினில் ஒருவருக்கொருவர் வாழ்ந்திடுவோம்.