பா எனும் எழுத்துருக் கோள்
வா வெனக்கோடு கீழிறங்கும் புவி
தா என பதிக்கும் நிலம்
நா ஒலிப்பு மேல் எழும். ‘ |__| ‘
எழும்பட ‘ ப ‘ ஆவெனும் ‘ பா ‘
வாழும் பாரின் நம் நிலை
ஏழு சுழியம் ஆகும் கோடி
நாழி ஆகி விடும் பொழுது.
பொழுதும் பொறுப்பும் கடமையும் உரிமையுடன்
வாழுகின்ற மனித திறன் சேரும்
ஏழுமலை ஊரும் உறவும் தொடர்பும்
இழுக்கும் புவியீர்ப்பு விசையே யாற்றல்.
ஆற்றல் வாய்ப்பு உள்ள பாவினம்
காற்று சீரமைப்பு மூலம் படரும்
சுற்றும் சுடரே பாவின வகை
ஏற்றம் பிறக்கும் நாவிதழ் பாடல்.
பாடல் நாளும் ஒன்றிய ஓசை
நாட வேண்டிய கருத்து உணரும்
நாடறிய பதியும் பதிவுச் செயல்
உடல் உறுப்பின படிவத் தொடர்பு.
தொடர்பு பக்க அமைப்பு உருவகம்
படத்தை கொண்டு பேசும் மகிழும்
இடம் பெற்ற அளவு நிறைவு
தடம் பார்த்த நிலவாழ்வுத் துறை.
‘துறை’ ‘தாழிசை’ தனிச்சொல் பாவினம்
இறை இயற்கை பங்கில் பாக்கள்
உறை விடம் உண்ண உடை
முறைமை வழிமுறை ஒன்றே வகை.