பூக்கும் பூக்களில்
சேகரிக்கும் வையத்தேனீ
பூக்கள் பூக்கும் தருணம் புவி
ஆக்கம் தரும் போலும் உயிர்
காக்கும் படை யின அங்கம்
ஒக்கும் ஆற்றல் மிகும் நகரும்.
நகரும் தர சைகை வகை
பகரும் பக்கத் திறன் பயிலும்
மகிழும் வண்ணம் செயல் என்றும்
ஊகித்து உணரும் நுகரும் மணம்.
மணம் கமழும் மனித வளம்
குணம் கொண்டத் தொடர்பே அறம்
கணம் உள்ள தன்மை மற்றும்
பணம் கொடுப்பதும் தருவதும் இருப்பு.
இருப்பு நிலை ஏட்டின் வகுப்பு
கருப்பு பேரணியில் கலந்த கலவை
அரும்பு மலரும் மொட்டு விடும்
கரும்பு சுவைச் சேவையில் தேனீக்கள்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA