புவியடி சறுக்கு புரியாத நம்செருக்கு
கவிபாடி பதிந்தாலும் சதுரயடிக்கே தஞ்சம்
ஆவியாய் கரியமிலம் அச்சத்தில் நம்மூச்சு
ஏவிவிடும் ஏவுகணை எகத்தாள சோதனை.
கண்டுபிடிப்பாலே கரைசேரும் நம் உயிர்
தண்டுவடமே நிமிர, நிற்க பலகாலம்
வண்டுத் தேன் எடுத்து பக்குவமா
உண்டு சுவைத்து உரக்க பேசுதிங்கே.
வரம்பற்ற வாழும்தொடர் சுற்றுலா நடத்தி
மரம்விடும் காற்று வாழ வழிதேடல்
ஓரமாய் நின்றுவிட்டு உயர்திணை நம்பேச்சு
நரம்பு தசையாலே நகருவது மெய்யாலே.
பக்குவமாய் இருந்து நிலத்தை வாழ்த்திடு
உக்கிரமான வெயில் தடுக்க வாழ்ந்திடு
வக்கனையாய் பேச வாய்ப்பதே வாய்ப்பு
ஆக்கமே இங்கே திறனாக வாய்த்திடும்.