பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்
ஆற்றும் ஆற்றலே ஆளுமை பண்பு.

பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்
ஆற்றும் ஆற்றலே ஆளுமை பண்பு.

ஒற்றை செல்லில் ஓங்கும் உயிர்க்கரு
நற்றிணை தோற்ற பொலிவில் தொடரும்
பற்றும் ஒற்றுமை பற்றாக்குறை தீர்க்கும்
ஆற்றும் ஆற்றலே ஆளுமை பண்பு.

தந்துகிகள் தரத்தை உயர்த்தும் தடம்
உந்தி பெறும் வகை உண்டு
வந்து வந்து சேரும் பருவம்
அந்த அளவுத் தொடரே வளரும்.

மூலக்கூறுகள் முற்றாக முடிவெடுக்கும் திறன்
பலம் கொண்டு பற்றிடும் உணவு
நலம் கொள்ளும் தளமாக்கத் தசை
வலம் இடம் யாவும் ஒருங்கிணைவே.

அன்பே மொழியாம் அஃதே வழியாக
நன்மை தீமை நல்கும் நற்சிந்தை
பன்மை விகுதியில் தகுதி பெற்று
அன்மைத் தொடர்பினில் பண்பு பழக்கமாகும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA