பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள் உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.

பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள்
உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.

இரவும் பகலும் வரும் வழி
பரவும் காற்று இருள்நீக்கும் வெளிச்சம்
நரம்பும் நாடியும் ஒடும் தேகம்
வரவும் செலவும் இருப்புநிலைக் குறிப்பு.

இருப்புநிலை இயற்கை மழை நீர்
உருகும் பனி கடல்நீர் பாகம்
பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள்
உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.

படிமலர்ச்சி வரலாற்றை காண்க கலந்த
படிநிலை கருத்து கோவை கோடி
பிடித்து பிறகு கருத்தில் கொள்வினை
படிப்படியாய் முன்னேறி வரும் விதைகள்.

விதைகள் மூலம் பயிர் தொழில்
அதை அறிந்த பின் விடைகண்டாய்
இதைத் தொடர்ந்தே நலம் கண்டாய்
அதை அதைவைத்தே ஆளும் அறம்

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்